தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்தார். 10 வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜ் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமாகி 2 ஆண்டுகளில் இவரது காதல் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
24
மேக்னா ராஜ் விளக்கம்:
இந்த நிலையில் காதல் கணவர் இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, மேக்னா ராஜ் ஆவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து மேக்னா ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
34
2ஆவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை
அதாவது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, எனக்கு நீயே வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் கணவர் என்று பதிவிட்டுள்ளார். இனிமேல் அவரது வாழ்க்கையில் 2ஆவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது இந்த போஸ் மூலம் தெளிவாக தெரிகிறது. தனது மகனை உலகமாக நினைத்து இப்போது வாழந்து வருகிறார்.
மகனின் எதிர்காலம் பற்றி தான் சிந்தித்து வருகிறேன்:
சிரஞ்சீவி சார்ஜா இறந்து ஒரு வருடத்தில் கூட 2ஆவது திருமணம் குறித்து வதந்திகள் வெளியானது. அப்போதும் 2ஆவது திருமணத்திற்கு விளக்கம் கொடுத்திருந்தார். அதில், ஒரு சிலர் 2ஆவது திருமணம் செய்து கொள் என்கிறார்கள். இன்னும் சிலர் மகனுக்காக வாழ வேண்டும் என்கிறார்கள். அப்படியிருக்கும் போது நான் யார் சொல்வதை கேட்பது. நான் இப்போது மகனின் எதிர்காலம் அவனை பற்றி தான் சிந்தித்து வருகிறேன். எனது கணவர் இந்த தருணத்தை வாழ்ந்து விட வேண்டும் என்பார். அவர் கூறியது போன்று தான் இப்போது வாழ்ந்து வருகிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.