சிங்கத்தை தொடர்ந்து சிவா வலையில் சிக்கிய சிறுத்தை! கங்குவா இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
கங்குவா படத்தின் படுதோல்விக்கு பின்னர் சிறுத்தை சிவா இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது யார் என்பதை பற்றி பார்க்கலாம்.
கங்குவா படத்தின் படுதோல்விக்கு பின்னர் சிறுத்தை சிவா இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது யார் என்பதை பற்றி பார்க்கலாம்.
Director Siruthai Siva Next Movie : ஒளிப்பதிவாளராக தெலுங்கு திரையுலகில் பணியாற்றிய சிவா, நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு ரிலீஸ் ஆன சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய சிவா, மாஸ் வெற்றியை ருசித்தார். சிறுத்தை படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்துடன் கூட்டணி அமைத்த சிவா, அவர் நடித்த வீரம் படத்தை இயக்கினார். அப்படமும் ஹிட் ஆனதால் சிவாவுக்கு கோலிவுட்டில் மவுசு அதிகரித்தது.
அஜித்தின் பேவரைட் இயக்குனர்
முதல் இரண்டு படங்களை ஹிட் கொடுத்த சிவா, அடுத்தடுத்து வேதாளம், விவேகம் என அஜித்தை வைத்து இரண்டு தோல்விகளை கொடுத்து பெரும் பின்னடைவை சந்தித்தார். இருப்பினும் சிவா மீது நம்பிக்கை வைத்த அஜித், அவருடன் நான்காவது முறையாக விஸ்வாசம் என்கிற படத்தில் கூட்டணி அமைத்தார். அப்படம் அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு சிவாவுக்கு கிடைத்தது.
இதையும் படியுங்கள்... கங்குவா மாதிரியே இன்னும் 6 கதை வச்சிருக்கேன் - ஷாக் கொடுத்த சிறுத்தை சிவா
கவுத்திவிட்ட கங்குவா
அதை ஏற்று அவரை வைத்து அண்ணாத்த என்கிற படத்தை இயக்கினார் சிவா. அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி ரசிகர்களை இம்பிரஸ் செய்ய தவறியதால் தோல்வி படமாக அமைந்தது. பின்னர் நடிகர் சூர்யா உடன் கூட்டணி அமைத்த சிவா, அவரை வைத்து கங்குவா என்கிற பிரம்மாண்ட படத்தை இயக்கினார். சுமார் 2 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு மத்தியில் உருவான இப்படம் கடந்த ஆண்டு பான் இந்தியா அளவில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
சிறுத்தை சிவாவின் அடுத்த படம்
ஆனால் அவர்கள் பட புரமோஷனில் கொடுத்த பில்டப்பினார் ஓவர் எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர்களுக்கு கங்குவா ஏமாற்றம் அளித்தது. இதனால் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா மாறியது. அதுமட்டுமின்றி அப்படம் கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறாராம் இயக்குனர் சிவா. அவரின் அடுத்த படத்தில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், தற்போது கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக கார்த்தியை வைத்து சிறுத்தை என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த சிவா, அவருடன் மீண்டும் இணைய உள்ளதால் இது அவரின் கம்பேக் படமாக அமைய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய், ரஜினி, கமலையே ஓடவிட்டவர்... சிறுத்தை சிவாவின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவங்கள் ஒரு பார்வை