கோவை திரையரங்கில் 100-வது நாள் 'விக்ரம்' படத்தின் வெற்றிவிழா! கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்!

Published : Sep 16, 2022, 08:53 PM IST

விக்ரம் திரைப்படத்தின் 100-வது வெற்றி விழா கோவை கே ஜி சினிமாஸ் திரையரங்கில் நடந்த நிலையில், இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.  

PREV
15
கோவை திரையரங்கில் 100-வது நாள் 'விக்ரம்' படத்தின் வெற்றிவிழா! கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்!

இந்த வருடத்தின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர், திரைப்படமான 'விக்ரம்' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி  இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்கிற சிறப்பை பெற்றது.

25

உலக நாயகன் கமல்ஹாசன், நடித்து... தயாரித்திருந்த இந்த படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில், உலக நாயகன் கமல்ஹாசனுடன், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்திருந்தது. உலக நாயகன் கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம், பிரமாண்ட ஆக்சன் காட்சிகள், பரபரப்பான திரைக்கதை, நட்சத்திர நடிகர்களின் அசத்தலான நடிப்பு என இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 

மேலும் செய்திகள்: உதவி செய்ய ஆளில்லாமல் நடுரோட்டில் தவித்த நபர்.! மீண்டும் மெக்கானிக்காக மாறிய அஜித்.! ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு
 

35

இதுவரையிலான பல திரைச்சாதனைகளை முறியடித்து, இந்திய அளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிட்டார். 

45

இந்த படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன், Red Giant Movies இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி இவர்கள் தலைமையில், ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்ட விழா இன்று கோயம்புத்தூரில் கே ஜி சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்:அதற்குள் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் சீரியல்..! ரசிகர்களை அப்செட் ஆக்கிய தகவல்..!
 

55

இதில் கமல்ஹாசன் நேரடியாக கலந்து கொண்டு சிறப்பித்தார், மேலும் திருப்பூர் சுப்ரமணியம் போன்ற பலர் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் விக்ரம் படம் தான் இத்தனை நாட்கள் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்று ஓடியதாக திருப்பூர் சுப்பிரமணியம் பேசினார். நடிகர் கமல்... படம் குறித்து பேசிய பின்னர் படத்திற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories