இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர்கள் இருவரில் ஒருவரா? பரபரப்பு தகவல்...

Published : Oct 16, 2021, 01:59 PM IST

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss tamil 5) நிகழ்ச்சியில் இருந்து இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற உள்ளதாக ஒரு தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  

PREV
17
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர்கள் இருவரில் ஒருவரா? பரபரப்பு தகவல்...

நடிகர் கமல்ஹாசன் (Kamalhassan) தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, அக்டோபர் 3 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது.

 

27

இதுவரை 16 போட்டியாளர்கள் மட்டுமே கடந்த நான்கு சீசன்களில் உள்ளே வந்த நிலையில், இம்முறை 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர்.

 

37

இதுவரை பெரிதாக இந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தாலும் வரும் வாரங்களில் சூடு பறக்க பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

47

முதல் வாரத்தில் எந்த ஒரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றாலும், இரண்டாவது வாரத்தில் பவானி ரெட்டி மற்றும் தலைவி தாமரையை தவிர 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

 

57

எனவே இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பது இதுவரை கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது..

 

67

தற்போது வெளியாகியுள்ள தகவலில் மிக குறைந்த வாக்குகளுடன், டேஞ்சர் சோனில் அபிநய், சுருதி, சின்னப்பொண்ணு, மற்றும் அபிஷேக் ஆகியோர் உள்ளதாகவும். இவர்களில் சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் ஆகியோர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

77

பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளதால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

click me!

Recommended Stories