நடிகை வாணி போஜன் நாயகியாக நடித்த, 'தெய்வமகள்' சீரியலில்... முரட்டு அண்ணியாராக வலம் வந்தவர் ரேகா. வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததால் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும், இவருடைய நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது.
இதை தொடர்ந்து நந்தினி, உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தாலும்... இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது தெய்வத்திருமகள் தான்.
இந்த சீரியல் சுமார் 3 வருடங்கள் ஒளிபரப்பாகி மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங்கில் செம்ம டஃப் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலில் வில்லத்தனம் கொண்ட அண்ணியாக நடித்த ரேகா கர்நாடகாவைச் சேர்த்தவர். முதன் முதலில் கன்னட சீரியல்களில் தான் நடிக்கத் துவங்கினார். ஆனால் தமிழில் இவர் நடித்த முதல் சீரியலே இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்நிலையில் இவரை தொடர்ந்து இவரது மகள் பூஜா தற்போது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக ஆயத்தமாகியுள்ளார்.
எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கும் ரேகா, தன்னுடைய மகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.
ஆனால் இந்த முறை, மகளின் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து, அதில் தன்னுடைய மகளை பெரிய திரையில் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பூஜா ஹீரோயினாக அறிமுகமாவதற்கு முன்பே இப்படியா? என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு கவர்ச்சி குலுங்க குலுங்க வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடுவது போல், பாத் டப்பில் கையில் ஜூஸ் கிளாஸுடன் இவர் படுத்தபடி எடுத்து கொண்ட புகைப்படம் வேறு லெவல்.
சின்னத்திரையில் அம்மா ரேகா... நிலையான இடத்தை பிடித்தது போல், மகளும் வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.