மனைவியை அடித்து கொடுமை படுத்திய பிக்பாஸ் அபிஷேக்..! முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட தீபா..!

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss Seasson 5 Tamil) நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வரும் அபிஷேக் ராஜா (Abishek Raja) அவரது மனைவியை அடித்து கொடுமை செய்ததால் தான், இருவருக்குள்ளும் விவாகரத்து நடந்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது, அவரது மனைவி தீபா (Deepa) கொடுத்துள்ள பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகவே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதை, மற்றும் சோக கதைகளையும், தங்களுடைய துறையில் வளர எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம், ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளோம் என்பது குறித்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக விளையாடி வருபவர் அபிஷேக் ராஜா. இவர் தன்னுடைய அம்மா, அப்பா பற்றி பேசிய அளவிற்கு தன்னுடைய விவாகரத்து குறித்து அதிகம் பேசவில்லை.


திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ஒரு தவறான ஆளாக இல்லாமல் இருந்திருப்பேன் என்றும், என் அப்பாவை காப்பாற்றி இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இவரது மனைவி தீபா சாமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், கணவன் மனைவியை, அடிப்பது கொடுமை படுத்துவது போன்ற சமூக அக்கறை கொண்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் ஒரு கணவன் மனைவியை அடிப்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. குழந்தைகள் முன் கணவன் மனைவியை அடிப்பதால், அந்த குழந்தையும் அது சாதாரண ஒன்று என்று நினைத்து நாளை தன்னுடைய மனைவியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவர அடிப்பதை கையாளலாம். ஆனால் இது மிகவும் தவறான ஒன்று.

என்னுடைய வாழ்க்கையில் இப்படி நடந்த போது, பலர் இந்த காலத்தில் கூட இப்படி நடக்கிறதா என கேட்டனர். என தன்னுடைய கணவனான அடித்து கொடுமை படுத்தியதால் தான் தனக்கு விவாகரத்து நடந்தது என்பது குறித்தும் தீபா பேசியுள்ளார்.

அதே போல் ஒரு முறை கணவன் தன்னுடைய மனைவியை அடித்து விட்டு மன்னிப்பு கேட்டால் கூட, மீண்டும் ஏதாவது பிரச்சனை வரும் போது அடிப்பர் எனவே முதல் முறை இப்படி செய்யும் போதே... அதனை அலட்சியமாக எடுத்து கொள்ள கூடாது என கூறியுள்ளார். தற்போது இவர் கொடுத்துள்ள பேட்டி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதே நேரம், அபிஷேக் ஏன்? தன்னுடைய விவாகரத்து குறித்து முழுமையாக பேசவில்லை என்றும் பலர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Latest Videos

click me!