விவாகரத்தை மறக்க அவசர அவசரமாக சமந்தா எடுத்த அதிரடி முடிவு..! ரசிகர்கள் குஷியோ குஷி..!

Published : Oct 15, 2021, 07:09 PM ISTUpdated : Oct 15, 2021, 07:10 PM IST

நடிகை சமந்தா (Samantha) தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்து முழுதாக இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், அவசர அவசரமாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறது. இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாய்க்கியுள்ளது.  

PREV
19
விவாகரத்தை மறக்க அவசர அவசரமாக சமந்தா எடுத்த அதிரடி முடிவு..! ரசிகர்கள் குஷியோ குஷி..!

கடந்த 2010 ஆம் ஆண்டு Ye Maaya Chesave என்கிற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய இவர்கள் பின்னர் காதலர்களாகவும் மாறினர். இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கிய பின்னர், இரு வீட்டு சம்மதத்துடன்... கோவாவில் மிக பிரமாண்டமாக, கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டு இவர்களுடைய திருமணம் 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது.

 

29

திருமணத்திற்கு பின், திரைப்படங்களில் சமந்தா நடித்து வந்தாலும் ஒரு பொறுப்பான மருமகளாகவும், அனைவரும் பொறாமை கொள்ளுபடி நடந்து கொண்டார். தன்னுடைய குடும்பத்தில் என்ன, விசேஷம் நடந்தாலும், படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்வது சமந்தா சமத்து பொண்ணு.

 

39

ஆனால், சமீபத்தில் தன்னுடைய மாமனார் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டி, அமீர் கானுக்கு விருந்து கொடுக்கும் பார்ட்டி என எதிலும் சமந்தா கலந்து கொள்ளாமல் இருந்தது கணவன் - மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை உறுதி செய்யும் விதமாகவே அமைந்தது.

 

49

இந்நிலையில் கடந்த சில தினம், தங்களுடைய விவாகரத்து குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா - நாக சைதன்யா இருவருமே, தங்களுடைய பிரிவை உறுதி செய்தனர்.

 

59

இவர்களுடைய பிரிவை தொடர்ந்து, சமந்தாவின் மாமனாரும், நாகசைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா கனத்த இதயத்துடன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது வரை இவர்களது திருமண முறிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை.

 

69

அதே போல் சமந்தாவின் தந்தையும், தன்னுடைய மகளின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக கூறி இருந்தார். இது குறித்த தகவலும் வெளியாகி வைரலானது.

 

79

விவாகரத்து முடிவுக்கு பின், சமந்தா சில மாதங்களுக்கு பிறகே மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது... அடுத்ததாக இவர் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

89

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் சமந்தாவின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை சாந்தரூபன் என்பவர் இயக்கவுள்ளார்.

 

99

விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை செம்ம குஷியாகியுள்ளது. விரைவில் நயன்தாரா - விஜய் சேதுபதியுடன் சமந்தா நடித்து முடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

click me!

Recommended Stories