ரசிகன் அல்ல முரட்டு பக்தன்... கமல் பற்றி டாப் டூ பாட்டம் அறிந்த ரோபோ சங்கர் - வைரலாகும் பழைய பேட்டி

Published : Sep 19, 2025, 07:34 AM IST

நடிகர் ரோபோ சங்கர் கமல்ஹாசனின் மிகத் தீவிரமான ரசிகன் என்பதை உணர்த்தும் விதமாக கமலைப் பற்றி ஒரு பேட்டியில் டாப் டூ பாட்டம் பேசி இருப்பார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

PREV
14
Robo Shankar Ardent Fan of Kamalhaasan

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களிலும் அவரைப்பற்றிய ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் அவர் கமல்ஹாசனைப் பற்றி பேசிய வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கமலைப் பற்றியும் அவர் செய்த சாதனைகள் பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார் ரோபோ சங்கர்.

24
கமலின் சாதனைகளை அடுக்கிய ரோபோ சங்கர்

அந்த பேட்டியில் ரோபோ சங்கர் கூறியதாவது : “நான்கு தேசிய விருதுகள் வாங்கிய ஒரே ஒரு தென்னிந்திய நடிகர் கமல் சார் தான். 3 நந்தி அவார்டு வாங்கியது அவர்தான். 19 பிலிம்பேர் விருது வாங்கியவர் அவர்தான். மூன்று சர்வதேச விருதுகள் வாங்கியவர் அவர்தான். உலகத்திலேயே 200 விருதுகளுக்கு மேல் வாங்கிய ஒரே நடிகன் உலகநாயகன் மட்டும் தான். 7 முறை ஆஸ்கர் கதவுகளை தட்டிய ஒரே தென்னிந்திய நடிகர் கமல்ஹாசன் தான். இன்றுவரை சிறந்த 100 படங்களை எடுத்துப் பார்த்தால் அதில் இருக்கும் தமிழ் படம் நாயகன் தான். அமெரிக்காவில் ரிலீஸ் ஆகி 12 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய படமும் நாயகன் தான்” என அவர் சொன்ன லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

34
கமலின் வெறித்தனமான ரசிகன் ரோபோ சங்கர்

தொடர்ந்து பேசியுள்ள ரோபோ, 1980-ல் தலைவருக்கு கலைமாமணி விருது கொடுத்தார்கள். 2002-ம் ஆண்டு ஜனவரி 15ந் தேதி அவர் உடல் தானம் செய்தார். அவருக்கு சத்யபாமா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். 1982-ல் ஒரு நடிகனுக்கு ஐந்து படங்கள் ஒரே ஆண்டில் ரிலீஸ் ஆகி, நான்கு படங்களும் வெள்ளிவிழா கண்ட ஒரே நாயகன் கமல்ஹாசன் தான். அதில் சனம் தேரி கசம் 369 நாளும், வெற்றி விழா 102 நாட்களும், வாழ்வே மாயம் 108 நாளும், சகலகலா வல்லவன் 110 நாளும், மூன்றாம் பிறை 200 நாட்களும் ஓடி சாதனை படைத்தது. முதன்முறை மாநாடு நடத்திய நடிகரும் உலகநாயகன் தான்.

44
ரோபோ சங்கர் மறைவால் கமல் உருக்கம்

1986-ல் கோயம்புத்தூரில் மிகப்பெரிய மாநாடு நடத்தினார். இதுவரை 45 லட்சம் லிட்டர் ரத்த தானம் கொடுத்த ஒரே நடிகருக்கான நற்பணி இயக்கம் கமலுடையது தான். 15 ஆயிரம் ஜோடி கண் தானம் கொடுத்த ஒரே நற்பணி இயக்கமும் அவருடையது தான். முதன்முறை ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியதும் கமல்ஹாசன் தான்... என கமல்ஹாசன் பற்றி ரோபோ சங்கர் பல டேட்டாக்களை கூறிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகிறது. கமல் மீது இம்புட்டு பாசம் கொண்டவராக இருக்கும் ரோபோ சங்கரின் மறைவால் தன் தம்பியை இழந்துவிட்டதாக உருகி இருக்கிறார் கமல்ஹாசன்.

Read more Photos on
click me!

Recommended Stories