ரோபோ சங்கரின் நீண்டநாள் ஆசை... கடைசி வரை நிறைவேறாமல் போன சோகம்..!

Published : Sep 19, 2025, 06:40 AM IST

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும், அவரின் நீண்டநாள் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போய் இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Robo Shankar Last Wish

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர் மயங்கி விழுந்ததை அடுத்து சென்னை பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு கடந்த இரு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கரின் உடல்நிலை நேற்று மோசமானது. அவருக்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

24
பிரபலங்கள் அஞ்சலி

ரோபோ சங்கர் மரணமடைந்த செய்தி அறிந்து ஒட்டுமொத்த் தமிழ் திரையுலகமே பேரதிர்ச்சியில் ஆழ்ந்தது. நேற்று இரவே ரோபோ சங்கரின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. நள்ளிரவு முதலே அவரது உடலுக்கு திரையுலகினரும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக ரோபோ சங்கருக்கு மிக பிடித்த நடிகரான தனுஷ், முதல் ஆளாக வந்து ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது மகள் இந்திரஜா மற்றும் மனைவி பிரியங்கா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

34
கமலின் தீவிர ரசிகன்

நடிகர் ரோபோ சங்கர், உலகநாயகன் கமல்ஹாசன் மிக தீவிரமான ரசிகன். கமல் படம் ரிலீஸ் ஆனால் முதல் ஷோ மிஸ் பண்ணாமல் பார்ப்பது மட்டுமின்றி தியேட்டருக்கு சென்று கமலின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்வார். அவர் எந்த அளவுக்கு தீவிர ரசிகன் என்றால், கமலின் ஆளவந்தான் படம் ரிலீஸ் ஆனபோது, மொட்டையடித்து ஆளவந்தான் கமல் கெட் அப்பில் சென்று அப்படத்தை பார்த்திருக்கிறார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மட்டுமின்றி ரோபோ சங்கரின் பேரனுக்கு நட்சத்திரன் என பெயர் வைத்ததும் கமல்ஹாசன் தான். அந்த அளவுக்கு கமலின் முரட்டு பக்தனாக இருந்து வந்தார் ரோபோ சங்கர்.

44
ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை

நடிகர் ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, அஜித்குமார் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு தன்னுடைய தலைவனான கமல்ஹாசன் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்தது. ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது. இந்தத் தகவலை ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரான மதுரை முத்து கூறினார். கமலின் வெறித்தனமான ரசிகனாக இருந்தும் அவரால் அவருடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியாமல் போனாலும், கமலுடன் நெருங்கிப் பழகிய ஒரே ரசிகன் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories