50 ஆண்டுகளாக இப்படி நடந்ததே இல்லை... மனம் வருந்திய கமல் ஹாசன்...!

First Published | Jul 19, 2021, 5:53 PM IST

பிசியாக படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த கமல் இந்த முறை தான் நீண்ட நாட்களாக சினிமாவை விட்டு விலகி இருந்ததாக தெரிவித்துள்ளார். 

உலக தரத்திற்கு படங்களை கொடுக்கவேண்டுமென மெனக்கெடுவதில் கமல் ஹாசனுக்கு நிகர் அவர் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும். நடிப்பிலும் அவரை மிஞ்ச ஆள் இல்லை என்பதால் தான் இந்திய சினிமா அவரை உலக நாயகன் என கொண்டாடி வருகிறது.
பிசியாக படங்களில் நடித்து வந்த கமல் ஹாசன் அரசியலில் கால் பதித்த காரணத்தால், பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டார். இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி கிரேன் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் கமல்ஹாசன் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. அரசியல் மற்றும் தேர்தல் பணிகளாலும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
Tap to resize

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல் ஹாசன் களமிறங்கினார். தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி என பிசியாக பரப்புரையில் ஈடுபட்டார்.
தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்குவதற்கு முன்னதாகவே மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தேர்தல் முடிந்த கையோடு படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இடையில் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட விக்ரம் பட ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பமானது. பிசியாக படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த கமல் இந்த முறை தான் நீண்ட நாட்களாக சினிமாவை விட்டு விலகி இருந்ததாக தெரிவித்துள்ளார்.
“விக்ரம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் ஒரு உயர்நிலை பள்ளியில் மீண் டும் இணைந்ததுபோல் உணர்ந்தேன். கடந்த 50 ஆண்டுகளில் சினிமா படப்பிடிப்பை விட்டு அதிக நாட்கள் விலகி இருந்தது இப்போதுதான். பல தயாரிப்பாளர்கள் ஒரு வருடமாக எந்தவித படப்பிடிப்புகளையும் நடத்த வில்லை. எனது ராஜ்கமல் பட நிறுவனத் தின் படப்பிடிப்பில் பங்கேற்க எனது தோழர் கள் அனைவரையும் வரவேற்கிறேன். குறிப் பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர், திறமையான நடி கர்களான விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரையும் வரவேற் கிறேன்" என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!