அனைவராலும் விரும்பப்படும் தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர்.
'அன்பு ஜெயிக்கும்' என கடைசி வரை கூறி, ஆரியை எதிர்த்ததற்காகவும், இவருக்கென ஒரு குரூப் பிக்பாஸ் வீட்டில் இருந்ததுமே அர்ச்சனா வெளியேற காரணமாக அமைந்தது..
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் விஜய் டிவி தொகுப்பாளினியாக மாறிய அர்ச்சனா, அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க துவங்கிவிட்டார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன் திடீர் என இவர் போட்ட பதிவு, இவரது ரசிகர்கள் மற்றும் இவரை நன்கு அறிந்த பிரபலங்களையும் கவலையடைய வைத்தது.
இதுகுறித்து அர்ச்சனா சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தாவது... "நான் எப்போதும் என் இதயத்தில் இருந்து அதிகம் செயல்பட்டு வருவதால் எனது மூளை வருத்தமடைந்து விட்டது. இதயத்தைவிட நான் சக்தி வாய்ந்தவன் என்பதை நிரூபிப்பது போல் தெரிகிறது. இப்போது எனது மூளை அருகே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறேன்.
எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் எனக்கு மூளை அருகே பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் சாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை கூறுகிறேன். இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி நான் மீண்டும் வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து கடந்த வாரம் அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தார். அவ்வப்போது அர்ச்சனாவின் உடல்நிலை குறித்து, அவரது மகள் சாரா மற்றும் தங்கை அனிதா ஆகியோர் தெரிவித்தனர்.
தற்போது அர்ச்சனா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் மகள் சாராவின் கையை பிடித்து கொண்டு அர்ச்சனா... "அச்சுமா வீட்டுக்கு வந்தாச்சு, உங்கள் எல்லோரையும் நாங்கள் கூடிய சீக்கிரம் பார்ப்போம், on our difficult road back to recovery " என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் முழுமையா வாழுங்கள், நாளைக்கு என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது என்றும் எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.