சினிமாவில் மீண்டும் பிஸியாகியுள்ள ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். அவ்வப்போது இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
டெல்லியை சேர்ந்த சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது
லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை பிரிந்த பின்னர், ஸ்ருதி தற்போது சாந்தனுவை காதலித்து வருகிறார். இதனை அவரே உறுதியும் செய்துள்ளார்.
தற்போது மும்பையில் இருக்கும் ஸ்ருதி, காதலருடன் வெளியே சென்ற போது எடுக்க பட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது .
இந்த புகைப்படங்களில் ஸ்ருதி அல்ட்ரா மாடர்ன் உடையில் காதலருடன் நின்று போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் இருவரும் இறுக்கமாக கை கோர்த்து செல்லும் புகைப்படங்களும் உள்ளதை பார்க்கலாம்.
ஸ்ருதி - சாந்தனுவின் இந்த ரீசென்ட் போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.