இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஏற்கனவே 'விக்ரம்' படத்தில் நடித்த உலகநாயகன் கமலஹாசன், மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
2016 ஆம் ஆண்டு 'அவியல்' என்கிற அந்தாலஜி திரைப்படத்தில், 'களம்' என்கிற தொடரை இயக்கி கவனம் பெற்றவர் தான் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர்ந்து முக்கோண காதல் கதையாக எடுக்கப்பட்ட 'மாநகரம்' படத்தை 2017 ஆம் ஆண்டு இயக்கினார். இதன் பின்னர் நடிகர் கார்த்தியை வைத்து, 2019 ஆம் ஆண்டு இவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
25
லோகேஷ் கனகராஜின் வெற்றி படங்கள்
எந்த ஒரு பாடலும், ஹீரோயினும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரே நாளில் எடுப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம், அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். இதன் பின்னர் உலகநாயகன் கமலஹாசனை வைத்து, லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் 60 முதல் 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
மேலும் தன்னுடைய திரைப்படங்களை, லோகேஷ் கனகராஜ் (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) என்பதன் அடிப்படையில் இயங்கி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது. மேலும் தற்போது 'கூலி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், இந்த படம் முடிந்த கையோடு நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி 2' படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
45
கைதி 2 படத்தில் கமல் இணைகிறாரா?
இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தை இயக்கி தயாரித்த எஸ் ஆர் பிரபு இந்த திரைப்படத்தையும் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 'கைதி 2' திரைப்படத்தில் கதாநாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறபடுகிறது.
முந்தைய பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இந்த பாகத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின் படி, நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசனும் நடிக்க உள்ளாராம். கமலஹாசன் காண கதாப்பாத்திரையை லோகேஷ் கனகராஜ் அவரிடம் கூறியுள்ளதாகவும் இதை கேட்டதுமே, எப்போது சூட்டிங் என முடிவு செய்துவிட்டு சொல்லுங்கள் நான் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என கமலஹாசன் நம்பிக்கையாக கூறிவிட்டாராம். எனவே கமல்ஹாசன் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.