Vikram : ஐந்தே நாட்களில் கலெக்‌ஷனில் டபுள் செஞ்சுரி அடித்த விக்ரம்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் கமல்

Published : Jun 08, 2022, 12:30 PM IST

Vikram Box Office Collection Day 5 : வெகு விரைவில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக விக்ரம் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
14
Vikram : ஐந்தே நாட்களில் கலெக்‌ஷனில் டபுள் செஞ்சுரி அடித்த விக்ரம்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் கமல்

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கிய படம் விக்ரம். கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத், சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

24

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஜூன் 3-ந் தேதி வெளியானது. ரிலீசானது முதல் பட்டி தொட்டியெங்கும் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

34

இந்நிலையில், இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. வெறும் 5 நாட்களில் இத்தகைய வசூல் சாதனையை அப்படம் நிகழ்த்தி உள்ளது. வெகு விரைவில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக விக்ரம் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

44

விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் விலையுயர்ந்த லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதுமட்டுமின்றி இப்படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய 13 பேருக்கு தலா ஒரு அப்பாச்சி பைக்கை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்.

இதையும் படியுங்கள்... Lokesh kanagaraj : கமல் கைப்பட எழுதிய ‘லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்’.... லோகேஷின் எமோஷனல் பதிவு

Read more Photos on
click me!

Recommended Stories