ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த 1.43 லட்சம் டிக்கெட்டுகள்; முன்பதிவில் தக் லைஃப் அள்ளிய வசூல் எவ்வளவு?

Published : Jun 02, 2025, 01:07 PM IST

தக் லைஃப் திரைப்படத்திற்கான முன்பதிவு ஜூன் 1ந் தேதி தொடங்கிய நிலையில், முதல் நாள் முடிவில் அப்படத்திற்கு எவ்வளவு வசூல் கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Thug Life Pre Booking Collection

தக் லைஃப் திரைக்கு வர இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இப்படம் 2025ம் ஆண்டு கோலிவுட்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக கருதப்படுகிறது. தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

24
முன்பதிவில் மாஸ் காட்டும் தக் லைஃப்

தொடங்கிய வேகத்தில் டிக்கெட் புக்கிங் படுஜோராக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் தக் லைஃப் படத்திற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக் ஆகி இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.2.58 கோடி வசூலித்து இருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் முன்பதிவு நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

34
வரலாறு படைக்குமா தக் லைஃப்?

இந்த ஆண்டு கோலிவுட்டில் முதல் நாள் அதிக வசூல் அள்ளிய படமாக அஜித் குமாரின் குட் பேட் அக்லி உள்ளது. அதைவிட, கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025ல் இந்திய பாக்ஸ் ஆபிஸில் விக்கி கௌஷலின் சாவா தான் அதிகம் வசூலித்த படமாக இருந்தது. தற்போது தக் லைஃப் அதையும் முறியடிக்கும் என கூறப்படுகிறது.

கமல்ஹாசனும் இயக்குனர் மணிரத்னமும் இணைந்திருக்கும் கேங்ஸ்டர் ஆக்‌ஷன் டிராமா படமான இதில் சிம்புவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன் இதுவரை கண்டிராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது டிரைலர் மூலமே தெரிந்தது. இதனால், ரசிகர்கள் இப்படத்தின் மீது மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

44
முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படங்கள் என்னென்ன?

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்திற்கு சிறப்பான தொடக்க வசூல் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்திய பாக்ஸ் ஆபிஸில் இப்படம் முதல் நாளில் 35 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நடந்தால், 2025ல் இரண்டாவது பெரிய இந்திய தொடக்க வசூல் படமாக இது இருக்கும்.

2025ல் இதுவரையிலான சிறந்த தொடக்க நாள் வசூல் அள்ளிய படங்கள்

கேம் சேஞ்சர் – 54 கோடி

சாவா– 33.10 கோடி

சிக்கந்தர் – 30.06 கோடி

குட் பேட் அக்லி – 29.25 கோடி

விடமுயற்சி – 27 கோடி

இந்தப் பட்டியலில் தக் லைஃப் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் வெளியாகிறது. ராஜ் கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் 250-300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories