கோவிலில் சிம்பிளாக நடந்த திருமணம்; ஜமீன் வீட்டு பெண்ணை கரம்பிடித்தார் காளிதாஸ் ஜெயராம்!!

Published : Dec 08, 2024, 11:58 AM ISTUpdated : Dec 08, 2024, 12:07 PM IST

Kalidas Jayaram weds Tarini Kalingarayar : நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தன்னுடைய நீண்ட நாள் காதலியான தாரிணி காளிங்கராயரை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரின் திருமண புகைப்படங்கள் வைரலாகிறது.

PREV
14
கோவிலில் சிம்பிளாக நடந்த திருமணம்; ஜமீன் வீட்டு பெண்ணை கரம்பிடித்தார் காளிதாஸ் ஜெயராம்!!
Kalidas jayaram Wedding

மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் தன் தந்தையை போலவே சினிமாவில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் காளிதாஸ் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் தனுஷின் 50வது படமான ராயனில், தனுஷ் தம்பியாக நடித்திருந்தார் காளிதாஸ். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை பெற்றது.

24
Malayalam actor Jayaram son Kalidas Marriage

இதுதவிர சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவக் கதைகள் என்கிற ஆந்தலஜி படத்தில் திருநங்கையாக நடித்து பாராட்டுக்களையும் பெற்றிருந்தார் காளிதாஸ். இதுதவிர விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் மகன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் காளிதாஸ். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த மாடல் அழகியான தாரிணி காளிங்கராயர் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டே நடந்து முடிந்தது.

இதையும் படியுங்கள்... ஜெயராம் மகன் காளிதாஸ் - தாரிணி ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட புகைப்படங்கள்!

34
Kalidas Jayaram Weds Tarini Kalingarayar

இந்நிலையில், காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காளிங்கராயர் ஜோடியின் திருமணம் இன்று கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

44
Kalidas jayaram Wife Tharini Kalingarayan

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்துள்ள காளிதாஸ் ஜெயராமுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. காளிதாஸின் காதலி தாரிணி காளிங்கராயர் ஊத்துக்குளி ஜமீனின் வாரிசு ஆவார். இதன்மூலம் ஜமீன் வீட்டு மாப்பிள்ளை ஆகி இருக்கிறார் காளிதாஸ். இவர்களின் வெட்டிங் ரிசப்ஷனில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... கங்குவா கசக்குது; புஷ்பா 2-னா இனிக்குதா? பாரபட்சம் காட்டுகிறதா கோலிவுட்!

click me!

Recommended Stories