புஷ்பா 2 படம் தான் தற்போது இந்தியா முழுவதும் டாக் ஆஃப் தி டவுன் ஆக உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. முதல் நாளே ரூ.294 கோடி வசூலித்த இப்படம், மூன்று நாட்களில் 500 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. சொல்லப்போனால் கோலிவுட்டில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமான கோட், ஒட்டுமொத்தமாகவே வெறும் 450 கோடி தான் வசூலித்து இருந்தது. அந்த வசூலை புஷ்பா 2 மூன்று நாட்களில் அள்ளி மாஸ் காட்டி உள்ளது.