பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக தனுஷ் படத்தை வெளியிடுவது ஏன்? - மவுனம் கலைத்த தயாரிப்பாளர் தாணு

First Published | Sep 27, 2022, 9:31 AM IST

Naane Varuven : பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்வதற்கான காரணத்தை தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படம் வருகிற 30ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படமும் திரைக்கு வர உள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏனெனில் பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல் படமாக பார்க்கப்படுகிறது. ஆதலால் அதனை சோலோவாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் தனுஷின் நானே வருவேன் படக்குழு, பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்வதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்வதற்கான காரணத்தை அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... மனம் கமழும் ‘மல்லிப்பூ’ பாடலுக்கு உயிர்கொடுத்த பாடகி.. யார் இந்த மதுஸ்ரீ? - அவர் பாடிய பாடல்கள் லிஸ்ட் இதோ

Tap to resize

அதன்படி அவர் கூறியுள்ளதாவது : “பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கும் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஜூன் மாதமே இந்த முடிவை எடுத்துவிட்டேன். லைகா தமிழ்குமரனுக்கும் அது தெரியும். நான் எனது அசுரன் படத்தையும் இந்த ஆயுதபூஜை சமயத்தில் தான் ரிலீஸ் செய்தேன். இந்த முறையும் இந்த 9 நாள் விடுமுறையை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை.

அதேபோல் நானே வருவேன் படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சி இல்லாததற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார். அதன்படி, எனது அசுரன், கர்ணன் போன்ற படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை 8 மணி காட்சி தான் போட்டோம். ஏனென்றால் அந்த காட்சியில் தான் உலகம் முழுக்க அனைவராலும் பார்க்க முடியும். இதற்காக இளைஞர்கள் அதிகாலையில அவசர அவசரமாக வந்து பார்க்கிறார்கள். அதெல்லாம் வேண்டாம் என்பதற்காக தான் 8 மணிக்கு முதல்காட்சி திரையிடப்படும்” என கூறினார்.

இதையும் படியுங்கள்... சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்கும் ரோஜா மகள்... அதுவும் விக்ரம் மகன் துருவ்வுக்கு ஜோடியாக..!

Latest Videos

click me!