நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான ஆதித்ய வர்மா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், துருவ் விக்ரமின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து பல்வேறு புராஜெக்ட்களில் பிசியாக உள்ளதால், துருவ் விக்ரமின் படம் தாமதம் ஆகி வருகிறது. இதனிடையே சமீபத்தில் மனசே என்கிற ஆல்பம் பாடலை பாடி, இயக்கி வெளியிட்டிருந்தார் துருவ். அப்பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், துருவ் விக்ரம் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி துருவ் விக்ரம் விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரோஜாவின் மகள் அன்சுமாலிகாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மூலம் நடிகை அன்சுமாலிகா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கடும் போட்டிக்கு நடுவே.. தளபதியின் 'வாரிசு' பட ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்..!