அடுத்தவங்க குடும்பத்தை கஷ்டப்படுத்தி வர காசு தேவையா? பயில்வானை பங்கம் செய்த கலா மாஸ்டர்!

First Published | Aug 9, 2022, 5:02 PM IST

தொடர்ந்து பிரபலங்களை பற்றி அவதூறாக பேசி சர்ச்சைகளை சிக்கி வரும் பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் மிகவும் காட்டமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

80 மற்றும் 90-களில் காமெடி நடிகராகவும், வில்லன் போன்ற குணச்சித்திர வேடத்திலும் நடித்த பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு பத்திரிக்கையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். Youtube சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர், அவ்வபோது சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் பிரபலங்கள் பற்றி பேசி வெளியிடும் வீடியோக்கள், மீடியாக்களில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறிவிடுகிறது.

இவர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவதால் இவரது youtube தளத்தை முடக்க வேண்டும் என்றும், இவரை கைது செய்ய வேண்டும் என சில பிரபலங்கள் கூட போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சமீபத்தில் கூட இயக்குனர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த 'இரவின் நிழல்' படத்தில் அரை நிர்வாணமாக நடித்த, நடிகை ரேகாவை இவர் விமர்சித்ததற்காக, திருவான்மியூர் கடற்கரையில் ஜாகிங் சென்ற பொது, பொது வெளியில் நேருக்கு நேராக சண்டை போட்ட வீடியோக்கள், சமூக வலைதளத்தில் படு வைரல் ஆகியது.

மேலும் செய்திகள்: திடீர் என கோவிலுக்கு விசிட் அடித்த விஜய் டிவி சீரியல் ஹீரோயின்கள்..! வைரலாகும் போட்டோஸ்..!
 

Tap to resize

dulquer salmaan angry about bayilvan ranganathan question in the sitaramam trailer event

திரைப்படத்தை தாண்டி பயில்வான் ரங்கநாதன் பலரை தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்து வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக  இசை வெளியீட்டு விழா முதல், செய்தியாளர் சந்திப்பு வரை அதில் கலந்து கொள்ளும் பிரபலங்களை சண்டை இழக்க தவறியது இல்லை. மேலும் பல பிரபலங்களை விமர்சனம் என்கிற பெயரில், வாய்க்கு வந்தவற்றை பேசி வருகிறார்.

bayilwan ranganathan

சமீபத்தில் கூட நடிகர் மீனாவின் கணவர் இறந்தது குறித்து பல்வான் ரங்கநாதன் பேசியது பலரையும் ஆதங்கப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். பயில்வான் ரங்கநாதன் பேச்சு குறித்து, பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: 'கடாவர்' படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்தனர்... செய்தியாளர் சந்திப்பில் அமலா பால் ஆதங்கம்!
 

Dance Master Kala

இது குறித்து அவர் கூறுகையில். "ஒரு நடிகரோ, அல்லது நடிகையோ... திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றால் அவர்களை பற்றி விமர்சனம் செய்து பேசுவது தவறு இல்லை. அவர்கள் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வரவில்லை என்றால் அதைக் கேட்பதும் தவறு கிடையாது ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பற்றி பேசுவது மிகவும் தவறான விஷயம்.

அது அவர்களை மட்டும் காயப்படுத்தாமல், அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட அனைவரையும் வேதனைப்படுத்தும் செயல், அப்படி ஒருவரை காயப்படுத்தி பேசுவதால் என்ன சந்தோஷம் கிடைக்கப் போகிறது, நான் அது போல் யாரையும் பேச மாட்டேன், அதுபோன்று பேசுபவர்களின் youtube வீடியோவையும் பார்க்க மாட்டேன். அப்படி பேசுபவர்களை பார்த்தல் கோபம் தான் வரும். இப்படி ஒருவர் பற்றி அவதூறாக பேசி... நீங்கள் போடும் வீடியோக்களுக்கு நிறைய வியூஸ் வருவதால்,  அதிக பணம் கிடைக்கிறதா? மற்றவர்கள் குடும்பத்தை கஷ்டப்படுத்தி வர காசை வச்சு என்னதான் செய்யப் போறீங்க என பயில்வானை பங்கங்கம் செய்துள்ளார் கலா மாஸ்டர்.

மேலும் செய்திகள்: தீராத காதல்... மனைவியின் ஆசையை நிறைவேற்ற காதலனுடன் அனுப்பி வைத்த சந்திரபாபு! அந்த நபர் யார் தெரியுமா?
 

Latest Videos

click me!