நடிகை காஜல் அக்ரவால் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இதனால் ரசிகர்களும் பதறிப்போயினர். காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு என கேட்டு வந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காஜல் அகர்வால், தான் நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். தனது சமூக வலைதள பக்கங்களில் இதுகுறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் காஜல்.
24
காஜல் அகர்வால் விளக்கம்
அந்த பதிவில், "எனது விபத்து மற்றும் மரணம் குறித்த சில ஆதாரமற்ற செய்திகளை நான் பார்த்தேன். இது முற்றிலும் பொய். நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார். காஜல் நலமாக இருப்பதாக அறிந்த ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும அவரை திரையில் காண ஆர்வமுடன் இருப்பதாக கூறி வருகின்றனர்.
34
காஜல் அகர்வால் திரைப்பயணம்
காஜல் அகர்வால் 2007 ஆம் ஆண்டு வெளியான திருத்தணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் தெலுங்கிலும் மகதீரா, ஆர்யா 2, டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபெக்ட் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தார். இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு நீல் கிச்சுலு என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.
காஜல் அக்ரவால் கடைசியாக சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்த 'சிக்கந்தர்' படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்து, கமல்ஹாசனுடன் 'இந்தியன் 3' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' படத்தில் மண்டோதரியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.