சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பணிக்கரிடம் ஆதி குணசேகரன் பற்றிய உண்மைகளை கேட்டு தெரிந்துகொள்கிறார் ஜனனி. அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜீவானந்தம் கொடைக்கானலில் உள்ள வீட்டில் தங்கி இருந்ததை அந்த வீட்டு வேலைக்காரன் போலீசிடம் கூறி விடுகிறான். இதையடுத்து, ஜீவானந்தத்தை பிடிக்க, அந்த வீட்டுக்கு விரைகிறது புலிகேசி டீம். அவர்கள் வீட்டுக்கு வந்த நேரத்தில், பின் வாசல் வழியாக வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார் ஜீவானந்தம். இருப்பினும் அவர்களை துரத்தி பிடிக்க மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது போலீஸ். புலிகேசியிடம் இருந்து எஸ்கேப் ஆன ஜீவானந்தம் ஜனனிக்கு போன் போட்டு பேசுகிறார். அவரிடம் தாங்கள் பெரியகுளம் வந்துவிடுவதாக கூறி இருக்கிறார்.
24
பணிக்கருக்கு ஜனனி வைத்த செக்
மறுபுறம் மணடபத்தில், பணிக்கர் பூஜையை தொடங்கி, ஜீவானந்தத்தை போலீஸ் துரத்தும் விஷயம் உள்பட பலவற்றை கூறுகிறார். அவரை மடக்கிய ஜனனி, பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறார். அவர் பணிக்கரிடம், நாங்க இந்த வீட்டுக்கு வாழ வந்தவங்க. இவர்களால் என்றைக்குமே எங்களுக்கு பிரச்சனை மட்டும் தான் இருந்திருக்கிறது.
எங்களுக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறை குழந்தைங்க வரைக்கும் எல்லாருமே இவங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நடக்கப்போவதை சொல்லும் உங்கள மாதிரி சக்தி வாய்ந்த குருவுக்கு, எங்களுடைய கதையும் நிச்சயம் தெரிந்திருக்கும் அல்லவா. எங்க கஷ்டங்கள் எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ல என கேட்கிறார் ஜனனி.
34
உண்மையை உடைக்கும் பணிக்கர்
தொடர்ந்து பேசும் ஜனனி, இவங்க மறைச்சு வச்சிருக்கும் பெரிய பெரிய ரகசியங்களெல்லாம் உங்களுக்கு தெரியுமல்லவா, எல்லாவற்றையும் சொல்லுங்க என கேட்கிறார். அதற்கு பணிக்கர் தெரியும் என சொல்கிறார். பின்னர் ஏன் இவங்க பக்கம் நிற்கிறீர்கள் என கேட்கிறார் ஜனனி. இவங்க வந்து உங்களிடம் கேட்டார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக கெட்டவங்க பக்கம் நிற்பது தான் ஒரு குருவோட தர்மமா?
கர்ம வினைகளை கணித்து நியாயத்தின் பக்கம் நிற்பதற்காக தான் கடவுள் உங்களுக்கு இந்த சக்தியை கொடுத்திருக்கிறார். அதை ஏன் இப்படி தப்பான நோக்கத்திற்கு பயன்படுத்துகிறீர்கள்? எங்க ரெண்டு பக்கத்திலும் யார் பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் உணருகிறீர்கள்? நாங்க செய்றது தப்பா? இல்ல இவங்க செய்யுறது தப்பா? என ஜனனி கேட்டதற்கு, அவங்க செய்யுறது தான் தப்பு என சொல்கிறார் பணிக்கர்.
ஆனால் நான் ஏற்கனவே சொன்னதுபோல் அது அவர்களுடைய கர்ம வினை. அதற்காக அவர்கள் அடுத்த ஜென்மத்தில் தண்டிக்கப்படுவார்கள் என சொல்கிறார் பணிக்கர். அப்போ இந்த ஜென்மத்திலேயே தப்பானவர்களுக்கு துணை போகும் உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் தண்டனை இருக்கிறதா என ஜனனி கேட்டதும் ஆடிப்போகிறார் பணிக்கர். இதனால் ஆதி குணசேகரன் பற்றிய ரகசியங்களை அம்பலப்படுத்த முடிவெடுத்தாரா பணிக்கர்? ஜனனி கொடுத்த அடியால் பணிக்கரின் மனம் மாறுமா? ஜீவானந்தம் பார்கவி உடன் மண்டபத்துக்கு வந்தாரா? என்கிற அனல்பறக்கும் எபிசோடுகள் இனி வர இருக்கின்றன.