திருமணமான நடிகைக்கு ஸ்கெட்ச் போடும் லைகா... ஏகே 62-வில் அஜித்துடன் ரொமான்ஸ் செய்யப்போகும் ஹீரோயின் இவரா?

Published : Feb 28, 2023, 11:52 AM IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நாயகனாக நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் ஹீரோயினாக நடிக்க இந்தியன் 2 பட நடிகையை லைகா நிறுவனம் சிபாரிசு செய்துள்ளதாம்.

PREV
14
திருமணமான நடிகைக்கு ஸ்கெட்ச் போடும் லைகா... ஏகே 62-வில் அஜித்துடன் ரொமான்ஸ் செய்யப்போகும் ஹீரோயின் இவரா?

நடிகர் அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் ஏகே 62. இப்படத்தி முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் சொன்ன கதை அஜித்துக்கும், லைகா நிறுவனத்துக்கும் திருப்தி அளிக்காததால் அவரை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டனர். தற்போது விக்கிக்கு பதிலாக அப்படத்தை இயக்க இயக்குனர் மகிழ் திருமேனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவர் அஜித்துக்கு ஆக்‌ஷன் திரில்லர் கதை ஒன்றை சொல்லி ஓகே வாங்கி உள்ளார்.

24

தற்போது ஏகே 62 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட் வெளிவந்தது. அதன்படி நடிகர்கள் அருண்விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.

இதையும் படியுங்கள்... விக்கியை தொடர்ந்து.. 2 படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நயன்? லேடிசூப்பர்ஸ்டாருக்கு இப்படி ஒரு நிலைமையா

34

இந்நிலையில், தற்போது ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி இயக்குனர் மகிழ் திருமேனி யாரை தேர்வு செய்வது என குழப்பத்தில் இருந்தபோது லைகா நிறுவனம் தரப்பில் இருந்து காஜல் அகர்வாலை சிபாரிசு செய்துள்ளார்களாம். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், ஏகே 62-விலும் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

44

நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே நடிகர் அஜித்துக்கு ஜோடியாக விவேகம் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தக்கூட்டணி உறுதியானால், அஜித்துக்கு ஜோடியாக அவர் நடிக்கும் இரண்டாவது படமாக ஏகே 62 அமையும். இதுதவிர ஏகே 62 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அதேபோல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ரஜினிக்காக மீண்டும் பீஸ்ட் பார்முலாவை கையில் எடுத்த நெல்சன்... இணையத்தில் கசிந்த ஜெயிலர் படக்கதை..!

click me!

Recommended Stories