நடிகை நயன்தாரா, கடந்த 2021-ம் ஆண்டு முன்னணி தயாரிப்பாளர் ஒருவரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் கதையின் நாயகியாக நடிக்க கமிட் ஆனாராம். இதற்காக படத்துக்கு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தமாக ரூ.20 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருந்ததாம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கால்ஷீட் கொடுக்காமல் நடிகை நயன்தாரா இழுத்தடித்து வந்ததால், கடுப்பான அந்த தயாரிப்பாளர், நயன்தாரா உடனான 2 படத்திற்கான ஒப்பந்தத்தை கேன்சல் செய்ததோடு, அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையையும் திருப்பி வாங்கி உள்ளாராம்.