கல்வி கட்டணம் இல்லாமல் தவித்த மாணவிக்கு உதவிய காஜல்..! எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா!

First Published | Apr 7, 2021, 1:22 PM IST

நடிகை காஜல் அகர்வாலிடம் கல்வி கட்டணத்திற்காக ஒரு மாணவி உதவி, கேட்க அதற்கு உடனடியாக காஜல் பணம் அனுப்பி உதவி செய்துள்ள தகவல் வெளியாக, ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
Tap to resize

திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு முன்பிருதே தன்னால் முடிந்த அளவிற்கு சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும், பலரது கல்விக்கு உதவியும் செய்துள்ளார். குறிப்பாக மலை கிராமம் ஒன்றில் பள்ளிக்கூடம் உறையும் கட்டிக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் காஜல் அகர்வாலிடம் மாணவி ஒருவர் கல்விக்கட்டணம் ரூ.83 ஆயிரம் கட்ட வேண்டும் என்றும், அதற்கு பணம் இன்றி தவிப்பதாகவும் ட்விட்டர் மூலம் உதவி கேட்டிருந்தார்.
இதை பார்த்த காஜல் அகர்வால், அந்த மாணவியை தொடர்பு கொண்டு அவரது வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று அவரது வங்கி கணக்கில் ரூபாய் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்து உள்ளார்.
இந்த தகவல் தற்போது வெளியாகவே ரசிகர்கள் பலர் மனதார தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!