ரீட்டாவாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ் – ரிவால்வர் ரீட்டா டிரைலர் என்ன சொல்கிறது?

Published : Nov 13, 2025, 08:44 PM IST

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

PREV
14
கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா

சைரன் மற்றும் ரகு தாதா படங்களுக்கு பிறகு இப்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் ரிவால்வர் ரீட்டா. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் ரீட்டா என்ற ரோலில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கிரைம் காமெடி கலந்த கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது.

இயக்குநர் ஜேகே சந்துரு இயக்கத்தில் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன், சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா வரும் 28ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. சீன் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

24
டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டார்

இந்த நிலையில் தான் இந்த படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் தான் இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கின்றனர். ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலரை பார்க்கையில் ரேவதி, ஊர்வசி ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான மகளிர் மட்டும் படத்தின் கதை போன்று தெரிகிறது. அதாவது, நாகேஷை வைத்து நடக்கும் காமெடி சம்பவங்கள் போன்று ரிவால்வர் ரீட்டா படத்திலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

கடந்த 1970 ஆம் ஆண்டு விஜய லலிதா மற்றும் ஜோதிலட்சுமி ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் டைட்டில் தான் கீர்த்தி சுரேஷ் படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது.

34
ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை:

இந்தப் படத்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவருக்கு அம்மா ரோலில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் சமையல் செய்ய காய்கறி வாங்க கடைக்குச் செல்கிறார். அங்கு, அவரிடமிருந்து ஹேண்ட்பேக்கை ஒரு கும்பல் திருடிச் செல்கிறது. அதில், ரிவால்வர் மற்றும் ரத்தக் கறையுடன் கூடிய கத்தி ஒன்று இருக்கிறது. இதைக் கண்டு அந்த கும்பல் மிரண்டுவிடுகிறது.

44
ரிவால்வர் ரீட்டா கதை

அந்த கும்பலிடம் நான் டானும் இல்ல, போலீசும் இல்ல, ரா ஏஜெண்டும் இல்ல. அதனால் அந்த ஹேண்ட் பேக்கை கொடுத்துவிடுங்கள் என்று கேட்கிறார். இப்படி ஆரம்பிக்கும் கதை அதன் பிறகு எப்படி நகர்கிறது என்பது தான் ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. இந்த தெருவில் ஒரு வீட்டில் தொழில் செய்கிறார்கள். அது எந்த வீடு தெரியுமா என்று ரெடிங் கிங்ஸ்லி கேட்பதோடு காட்சி ஒளிபரப்பாகிறது.

அதன் பிறகு ஆக்‌ஷன், காமெடி என்று எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு படமாக ரிவால்வர் ரீட்டா வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories