Jana Nayagan Sets Record Even Before Release: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் ரசிகர்களுக்கு, இந்த வருட பொங்கல் தளபதி பொங்கலாக அமைய உள்ளது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், இது தான் தளபதிக்கு கடைசி படம் என்கிற உண்மையையும் ரசிகர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது தளபதி விஜய், முழுக்க முழுக்க தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு என்ட்ரி கொடுக்க உள்ளதால், எந்த விதத்திலும் சினிமா தன்னுடைய மக்கள் பணிக்கு பாதகமாக இருக்க கூடாது என்பதால், கனத்த இதயத்தோடு சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
25
பகவத் கேசரி ரீமேக்:
தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும், 'ஜனநாயகன்' திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி உள்ளார். இந்த படம், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பகவத் கேசரி' திரைப்படத்தின் ரீ-மேக்கா உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் பாடல் மூலம் இந்த தகவல் கிட்ட தட்ட உறுதியாகி உள்ளது. அதே போல் 'பகவத் கேசரி' படத்தின் உரிமையை 'ஜனநாயகன்' படக்குழு பல கோடி பணம் கொடுத்து வாங்கி வைத்துள்ளது.
35
ரசிகர்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பு:
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் இந்த படத்தில், தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடிக்கிறார். இவர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். மேலும் மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், ப்ரியா மணி, வரலட்சுமி சரத்குமார், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
45
ஜனநாயகன் படத்தை கைப்பற்ற தீவிரம்:
KVN நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதே போல் இந்த படத்தின் உரிமைகளை கைப்பற்றுவதில் முன்னணி நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
55
ரிலீசுக்கு முன்பே கோடிகளில் வசூல்:
இந்த நிலையில் தான், 'ஜனநாயகன்' ப்ரீ பிஸ்னஸ் மூலமாக மட்டுமே ரூ.325 கோடிக்கு வெயிட்டாக கல்லா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழக திரையரங்க உரிமை ரூ.100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை ரூ.80 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதை தவிர 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.110 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தளபதியின் கடைசி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்து, இப்படம் ரூ.1000 கோடி கல்லா கட்டும் என அடித்து கூறி வருகின்றனர் திரையுலக வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.