Theatre release tamil movies on September 20 : விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இரண்டு வாரங்களாக தியேட்டர்களில் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில் அதற்கு போட்டியாக செப்டம்பர் 20ந் தேதி அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
தமிழ் சினிமாவில் செப்டம்பர் மாதம் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. இந்த 2 வாரமும் தளபதி விஜய்யின் கோட் ராஜ்ஜியம் தான். அப்படத்துக்கு போட்டியாக கடந்த இரண்டு வாரங்களாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்ததால், கோட் திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வந்தது. இந்த நிலையில், அப்படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க வருகிற செப்டம்பர் 20ந் தேதி அரை டஜன் தமிழ் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளன.
27
Kadaisi Ulaga Por
கடைசி உலகப் போர்
மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. அவர் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி தயாரித்துள்ள படம் தான் கடைசி உலகப் போர். இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். இப்படத்திற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தி்ல் ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
37
Lubber pandhu
லப்பர் பந்து
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இப்படம் செப்டம்பர் 20-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.
47
Nandhan
நந்தன்
சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் நந்தன். இப்படத்தை கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக சுருதி பெரியசாமி நடித்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படமும் செப்டம்பர் 20ந் தேதி திரைக்கு வருகிறது.
தேசிய விருது வென்ற தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. அவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. இப்படத்தில் ஏகன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்த இப்படத்தில் யோகிபாபுவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படமும் செப்டம்பர் 20ந் தேதி திரைக்கு வருகிறது.
67
Sattam En Kaiyil
சட்டம் என் கையில்
சாச்சி இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் சட்டம் என் கையில். இப்படத்தில் நடிகர் சதீஷ் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜோன்ஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை மார்டின் டைடஸ் மேற்கொண்டுள்ளார். இப்படமும் வருகிற செப்டம்பர் 20ந் தேதி திரைகாண உள்ளது.
77
Dhonima
தோனிமா
பக்ரீத் படத்தின் இயக்குனர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் தோனிமா. இப்படத்தில் காளி வெங்கட் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜான்சன் இசையமைத்துள்ளார். பாக்யராஜ், சஜித் குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படமும் செப்டம்பர் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது.