பாடிகார்டுகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை வாரி வழங்கும் சினிமா பிரபலங்கள் - முதலிடத்தில் யார் தெரியுமா?

First Published | Sep 16, 2024, 11:00 AM IST

Highest Paid Bodyguards : பாடிகார்டு எனப்படும் பாதுகாவலர்களுக்கு திரைப்பிரபலங்கள் கோடிக்கணக்கில் சம்பளத்தை வாரி வழங்கி வருகின்றனர் அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Highest Paid Bodyguards

சினிமா நட்சத்திரங்களுக்கு செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் யூடியூபர்கள் கூட வெளியே ஈஸியாக செல்ல முடிவதில்லை. அவர்களை பார்த்ததும் போட்டோ எடுக்க குவிந்து விடுகிறார்கள். அப்படி இருக்கையில் முன்னணி சினிமா நடிகர், நடிகைகள் வெளியில் சென்றால் சும்மா விடுவார்களா என்ன ஈ மொய்ப்பது போல் மொய்த்துவிடுவார்கள் ரசிகர்கள். இதன்காரணமாக நடிகர், நடிகைகள் எங்கு சென்றாலும் பாடிகார்டுகளுடன் சென்று வருகின்றனர்.

shah rukh khan Bodyguard

கோலிவுட்டில் நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் தன்னுடன் தனி பாடிகார்டு படையையே அழைத்து வருவதோடு அவர்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளர்களிடம் இருந்து காசை வாங்கிவிடுகிறார்கள் என்கிற சர்ச்சையும் எழுந்தது. இந்த நிலையில், இந்தியாவிலேயே பாடிகார்டுகளுக்கு அதிக சம்பளம் வழங்கும் டாப் நடிகர், நடிகைகள் பற்றியும் அவர்கள் எவ்வளவு வாரி வழங்குகிறார்கள் என்பதைப் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... சைமா விருதுகள் 2024: அலேக்காக 5 விருதுகளை அள்ளிய ஜெயிலர்; ஜோடியாக விருது வென்ற விக்கி - நயன்! வின்னர்ஸ் லிஸ்ட்

Tap to resize

Salman khan Bodyguard

அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தான் இதில் டாப்பில் உள்ளனர். அவர்களில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தான். அவர் ரவி சிங் என்பவரை பாடிகார்டாக வைத்திருக்கிறார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.2.7 கோடி சம்பளமாக வழங்கி வருகிறார் ஷாருக்கான். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பாடிகார்டு ரவி சிங் தான். இவர் ஷாருக்கானிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். ஷாருக்கானின் அரணாகவே ரவி சிங் இருக்கிறார்.

Deepika Padukone Bodyguard

அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னுடைய பாடிகார்டாக இருக்கும் ஷேரா ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். அதேபோல் அமீர்கானின் பாதுகாவலர் யுவராஜும் ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வருகின்றார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பாடிகார்டாக இருக்கும் ஜிதேந்திரா ஷிண்டே ஒரு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். அதேபோல் பாலிவுட் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே ஆகியோரும் தங்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் வழங்கி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... முன்னாள் காதலிக்கு பாட்டு எழுதி இசையமைத்த இளையராஜா! என்னமா ஃபீல் பண்ணி எழுதிருக்காரு பாருங்க!!

Latest Videos

click me!