சைமா விருதுகள் 2024: அலேக்காக 5 விருதுகளை அள்ளிய ஜெயிலர்; ஜோடியாக விருது வென்ற விக்கி - நயன்! வின்னர்ஸ் லிஸ்ட்

First Published | Sep 16, 2024, 8:14 AM IST

SIIMA Awards 2024 Tamil : 2024-ம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா துபாயில் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் விருது வென்ற பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.

SIIMA Awards 2024 Tamil

சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த 2024-ம் ஆண்டுக்கான சைமா விருது விழா துபாயில் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் 2023-ல் வெளியான படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. இதுதவிர தமிழ் திரையுலகில் சாதனைக் கலைஞராக வலம் வந்த கேப்டன் விஜயகாந்துக்கு சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அந்த விருதை பெற்றுக்கொண்டார். 

SIIMA Awards

சிறந்த நடிகை (கிரிட்டிக்ஸ்)

சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கப்பட்டது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்தில் நந்தினியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த பாடகர்

சிறந்த பாடகருக்கான சைமா விருதை ஷான் ரோல்டன் வென்றார். இவர் இசையமைப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான குட் நைட் படத்தில் இடம்பெறும் நான் காலி பாடலை பாடியதற்காக அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த இயக்குனர்

சிறந்த இயக்குனருக்கான விருதை இயக்குனர் நெல்சன் தட்டிச் சென்றார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஜெயிலர் படத்தை இயக்கியதற்காக நெல்சனுக்கு சிறந்த இயக்குனருக்கான சைமா விருது வழங்கப்பட்டது.

Tap to resize

SIIMA Award 2024 winners

சிறந்த நடிகர்

2023-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான சைமா விருது சியான் விக்ரமுக்கு வழங்கப்பட்டது. மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக நடித்ததற்காக அவர் இவ்விருதை தட்டிச் சென்றார்.

சிறந்த அறிமுக இயக்குனர்

அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற போர்த் தொழில் படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா, சிறந்த அறிமுக இயக்குனருக்கான சைமா விருதை வென்றுள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்த மாமன்னன் படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... கூலி பட செட்டில் கூலாக டான்ஸ் ஆடி ஓணம் பண்டிகையை வைப் செய்த ரஜினி - வீடியோ இதோ

SIIMA Awards winners list

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான சைமா விருதை நடிகை சரிதா வென்றுள்ளார். இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த மாவீரன் படத்துக்காக இவ்விருதை வென்றிருக்கிறார்.

சிறந்த நடிகை

2023-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான சைமா விருதை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தட்டிச்சென்றார். கடந்த ஆண்டு வெளிவந்த அன்னபூரணி படத்துக்காக நயன்தாராவுக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகர்

நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகனாக நடித்த வஸந்த் ரவிக்கு சிறந்த துணை நடிகருக்கான சைமா விருது வழங்கப்பட்டு உள்ளது.

SIIMA Awards Tamil winners

சிறந்த வில்லன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக ஹரால்டு தாஸ் என்கிற கேரக்டரில் நடித்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு சிறந்த வில்லனுக்கான சைமா விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகர் (கிரிட்டிக்ஸ்)

மடோன் அஸ்வின் இயக்கத்தில் பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் மாவீரன். இப்படத்தில் ஹீரோவாக நடித்த சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான சைமா விருதை வென்றுள்ளார்.

சிறந்த பாடலாசிரியர்

நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் சிறந்த பாடலாசிரியருக்கான சைமா விருதை வென்றார். ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடலை எழுதியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த படம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து நெல்சன் இயக்கி அதிரிபுதிரியான வெற்றியை ருசித்த ஜெயிலர் திரைப்படம் சிறந்த படத்துக்கான சைமா விருதை வென்றது.

சிறந்த காமெடி நடிகர்

ஜெயிலர் படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இவ்விருதை அவருக்கு வழங்கினார்.

சிறந்த இயக்குனர் (கிரிட்டிக்ஸ்)

சித்தார்த் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சு அருண்குமார் சிறந்த இயக்குனருக்கான சைமா விருதை வென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்... அரசியல்வாதி வீட்டு மருமகள் ஆனார் மேகா ஆகாஷ்! பிரபலங்கள் புடைசூழ நடந்த திருமணம் - போட்டோஸ் இதோ

Latest Videos

click me!