இளையராஜா இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அவர் எழுதிய பாடல்கள் ஏராளமானவை ஹிட்டாகி இருக்கின்றன. அப்படி முன்னாள் காதலிக்கு இளையராஜா எழுதிய பாடல் ஒன்று பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. அந்தப் பாடல் பற்றியும், அது உருவான விதம் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தங்கர்பச்சான் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் அழகி. இதில் பார்த்திபன், தேவையானி, நந்திதா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது இசைஞானி இளையராஜாவின் இசை தான். இதில் இடம்பெற்ற பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி பாடல், ஒளியிலே தெரிவது தேவதையா, குருவி கொடஞ்ச கொய்யாப்பழம் போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன.
24
Isaignani Ilaiyaraaja
இதில் மற்றுமொரு ஸ்பெஷல் பாட்டும் உள்ளது. அதுதான் உன் குத்தமா என் குத்தமா பாடல். இந்த பாட்டின் சூழலே படத்தில் மிகவும் கனத்த இதயத்தோடு தான் இருக்கும். மருத்துவராக இருக்கும் பார்த்திபன், தன்னுடைய முன்னாள் காதலியை ஒரு கஷ்டமான சூழ்நிலையில் சந்திக்கிறான். எப்படியெல்லாம் வாழவேண்டியவ இப்படி கஷ்டப்பட்டு ரோட்டில் நிற்கிறாலே என்று மனவேதனையுடன் இருக்கும் போது இந்த பாடல் தொடங்கும்.
இந்தப்பாடல் உணர்வுப்பூர்வமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் வரிகள் தான். இந்தப்பாடலை எழுதியது வேறுயாருமில்லை நம்முடைய இசைஞானி இளையராஜா தான்.
இந்தப்பாடலில் ஒரு ஆழமான வரியும் இடம்பெற்று இருக்கும். ‘வீதியிலே இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு, வீணாகி போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு... மெய்குரல் பாடுது வீணையோடு” என்கிற அந்த வரி மனதை வருடும்படி இருக்கும்.
இளையராஜா இப்படி ஃபீல் பண்ணி எழுதி இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் முன்னாள் காதலியும் ஒரு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இளையராஜா காயத்ரி என்பவரை ஒருதலைபட்சமாக காதலித்துள்ளார்.
44
Ilaiyaraaja composed this hit song for Ex-Lover
வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கிய இவரை உருகி உருகி காதலித்துள்ளார் இளையராஜா. ஆனால் இசைஞானியின் காதலை ஏற்க மறுத்த காயத்ரி, தன் சமூகத்தை சேர்ந்த ஒருவரை மணமுடித்து ஊரைவிட்டு காலி செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம்.
காயத்ரி மீதான காதல் தோல்வி அடைந்த பின்னர் தான் சினிமாவில் அவருக்கு திருப்புமுனை ஏற்பட்டு வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து இருக்கிறார். இந்த சூழலில் தான் முன்னாள் காதலி பற்றி அழகி படத்தில் பாடல் எழுதி இருக்கிறார் இளையராஜா. அதில் வீணையை குறிப்பிட்டு அவர் எழுதிய வரிகள் தன் முன்னாள் காதலிக்காக எழுதி இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.