Satan The Dark
'சாத்தான் தி டார்க்' ஒரு ஹாரர் ஜானர் தமிழ் படம். சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், இப்போது ஓடிடியில் பல மொழிகளில் வெளியாகிறது. அமேசான் பிரைம், ஆஹா தமிழ் ஆகிய இரு ஓடிடி தளங்களில் மே 18 அன்று ரிலீஸ் ஆகிறது.
Jack Ryan: Ghost War
ஜான் கிரசின்ஸ்கி நடிக்கும் 'ஜாக் ரியான்: கோஸ்ட் வார்' ஒரு ஆக்ஷன் த்ரில்லர். சிஐஏ ஆபரேஷன்களில் நடக்கும் துரோகம், சதி மற்றும் கடந்த கால ரகசியங்களைச் சுற்றி கதை நகர்கிறது. அமேசான் பிரைம் ஓடிடியில் மே 20ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
Married To The Game 2
பிரபல கால்பந்து வீரர்களின் மனைவிகள் மற்றும் தோழிகளின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள ரியாலிட்டி டாக்குசீரிஸ் 'மேரிட் டு தி கேம்'. இதன் இரண்டாவது சீசன் இந்த வாரம் வெளியாகிறது. மே 20 அன்று அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளது.
Madhuvidhu
'மதுவிது' ஒரு மலையாள ரொமான்டிக் காமெடி. குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ளது. அடுத்தடுத்து திருமண முயற்சிகள் தோல்வியடையும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் எப்படி நுழைகிறது என்பதுதான் கதை. மே 22 அன்று சோனி லிவ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
SkyMed 4
ஏர் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள டிராமா சீரிஸ் 'ஸ்கைமெட்'. இதன் நான்காவது சீசன் இந்த வாரம் வெளியாகிறது. புதிய பைலட்கள் மற்றும் மருத்துவர்களின் வருகையால் குழுவில் ஏற்படும் மாற்றங்கள் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் மே 22ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.