Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!

Published : May 18, 2026, 10:16 AM IST

Karuppu Movie Box Office : சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வரும் கருப்பு திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Karuppu Surpass Kanguva Movie Lifetime Box Office

நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கடந்த 4 மாதங்களாக ரிலீஸ் ஆன பெரிய படங்கள் எதுவும் சோபிக்காமல் இருந்து வந்தது. அதுமட்டுமின்றி தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களில் பெரிய படங்கள் எதுவும் திரைக்கு வராமல் இருந்தது. எலெக்‌ஷன் முடிந்த கையோடு, தனுஷின் கர திரைப்படம் திரைக்கு வந்தது. அப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், வந்த வேகத்தில் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டு பிளாப் ஆனது.

25
வரவேற்பை பெறும் கருப்பு

திரையரங்குகளில் கூட்டமின்றி காத்துவாங்கிய நிலையில், கருப்பு படம் மே 14ந் தேதி ரிலீஸ் ஆகும் என தியேட்டர் உரிமையாளர்களே ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அன்றைய தினம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்களும் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து பிரச்சனைகளையும் ஒரே நாளில் முடித்து மே 15ந் தேதி கருப்பு திரைப்படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தனர். அப்படம் வெளியான முதல் ஷோவின் முடிவிலேயே பாசிடிவ் ரெஸ்பான்ஸ் வந்ததால் அடுத்தடுத்த காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகத் தொடங்கின.

35
100 கோடியை தாண்டிய வசூல்

இதன் எதிரொலியாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் படத்திற்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதனால் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது கருப்பு. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் கருப்பு திரைப்படம் ரூ.20 கோடி வசூலித்திருக்கிறது. நடிகர் சூர்யாவின் கெரியரில் ஒரே நாளில் தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற பெருமையை கருப்பு திரைப்படம் பெற்றுள்ளது.

45
சாதனையை முறியடித்த கருப்பு

அதுமட்டுமின்றி கருப்பு படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதோடு நடிகர் சூர்யா கடைசியாக 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய படம் கங்குவா. அப்படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூலே ரூ.107 கோடி தான். அந்த வசூல் சாதனையை மூன்றே நாட்களில் தட்டி தூக்கி இருக்கிறது கருப்பு. இதன்மூலம் நடிகர் சூர்யா தரமான கம்பேக் கொடுத்துள்ளார். நடிகர் சூர்யாவின் கெரியரில் கடந்த 10 ஆண்டுகளாக ஒருபடம் கூட வெற்றி வாகை சூடவில்லை. அந்த காத்திருப்புக்கு கருப்பு படம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

55
200 கோடியை நெருங்கும் கருப்பு

கருப்பு படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். அப்படத்தில் சூர்யா உடன் திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், தீபா, சுவாசிகா, ஷிவதா, வேல ராமமூர்த்தி, ஜார்ஜ் மரியான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தார். கருப்பு திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அப்படம் இந்த ஆண்டின் முதல் 200 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories