ஸ்டாலின் அப்பா என் குழந்தைக்கு நீதி வேணும்... அங்க சுத்தி; இங்க சுத்தி முதல்வரிடமே புகார் அளித்த ஜாய் கிரிசில்டா..!

Published : Sep 08, 2025, 02:00 PM IST

தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளார் ஜாய் கிரிசில்டா.

PREV
14
Joy Crizildaa Complaint to MK Stalin

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார் ஜாய் கிரிசில்டா. மேலும் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் ஜாய் வெளியிட்டு இருந்தார். இருப்பினும் இந்த திருமணம் பற்றி மாதம்பட்டி ரங்கராஜ், இதுவரை வாய்திறக்கவில்லை. அவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், ஜாய் கிரிசில்டாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

24
மாதம்பட்டி ரங்கராஜை சாடும் ஜாய் கிரிசில்டா

இந்த நிலையில், கடந்த மாதம், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார் ஜாய். மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து தான் ஒரு ரூபாய் கூட வாங்கியதில்லை என்றும், அவருக்கு நிறைய கடன் இருப்பதாகவும் பல பகீர் தகவல்களை வெளியிட்டார். இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கம் வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்துள்ளார் ஜாய் கிரிசில்டா.

34
ஸ்டாலினிடம் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது. இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இந்த நிலையிலும், நான் என் பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். எனது புகாரின் நிலை என்ன ஆனது என்பது எனக்குத் தெரியவில்லை. இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி அந்தஸ்து அளிக்கப்படுகிறது, மேலும் அவர் எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.

44
ஆக்‌ஷன் எடுப்பாரா ஸ்டாலின்?

அப்பா உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற பெண்கள் நம்புகிறார்கள். இதில் நீங்கள் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு விஐபியோ, ஒரு பிரபலமோ பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுற்றித் திரிய முடியுமா? என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், எனக்கும் நீதி வேண்டும்” என குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை தன்னுடைய பதிவில் டேக் செய்துள்ளார் ஜாய் கிரிசில்டா. அவரின் இந்த பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories