தி டெட் கேர்ள்ஸ் – செப்டம்பர் 11
ஜார்ஜ் இபார்குங்கோய்டியா நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் தொடர், 1960களில் மெக்சிகோவில் பாலாட்ரோ சகோதரிகள் எப்படி விபச்சார சாம்ராஜ்யத்தை உருவாக்கி, கொடூரமானவர்களாக மாறினர் என்பதைச் சொல்கிறது. பாலினா கைடன், அர்செலியா ரமீரெஸ், ஜோக்வின் கோசியோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
டயரி ஆஃப் எ டிச்ட்டு கேர்ள் – செப்டம்பர் 12
அமண்டா என்ற இளம்பெண் டேட்டிங்கில் சந்திக்கும் வேடிக்கைகள் மற்றும் சிக்கல்களைச் சித்தரிக்கும் காதல் நகைச்சுவை வலைத் தொடர் இது. கார்லா சீஹன், மோவா மேட்சன், இங்கெலா ஓல்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தி ராங் பாரிஸ் – செப்டம்பர் 12
பிரான்சில் உள்ள பாரிஸ் என்று நினைத்து டெக்சாஸில் தரையிறங்கும் கதாநாயகியின் காதல் கதை இது. அங்கு அவர் சந்திக்கும் ஒரு கவ்பாய் இளைஞனால் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை இந்தக் கதை விவரிக்கிறது.
யூ அண்ட் எவ்ரிதிங் எல்ஸ் – செப்டம்பர் 12
இளமை முதல் முதுமை வரை நீடிக்கும் இரண்டு நண்பர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும், மோதல்களையும் சித்தரிக்கும் உணர்ச்சிப்பூர்வமான நாடகம். கிம் கோ-யூன், பார்க் ஜி-ஹ்யூன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மெட்டீரியலிஸ்ட்ஸ் – செப்டம்பர் 13
டகோட்டா ஜான்சன், பெட்ரோ பாஸ்கல், கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் நியூயார்க்கில் நடக்கும் முக்கோணக் காதல் கதை. ஒரு புத்திசாலித்தனமான மேட்ச்மேக்கர் தனக்குப் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுப்பதில் சந்திக்கும் சிக்கல்களை இந்தக் கதை விவரிக்கிறது.