மகனில் பெயரோடு... பர்த் சர்டிபிகேட்டை வெளியிட்டு மாதம்பட்டியை வெறுப்பேற்றும் ஜாய்!

Published : Nov 02, 2025, 08:33 PM IST

மாதம்பட்டி ரங்கராஜின் 2-ஆவது மனைவியான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தன்னுடைய குழந்தையின் பர்த் சர்டிபிகேட்டை வெளியிட்டுள்ளார்.

PREV
15
ஆடை வடிவமைப்பாளர் ஜாய்:

தளபதி விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கும், பல இளம் ஹீரோயின்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் தான் ஜாய் கிரிசில்டா. மிகவும் பிஸியான ஸ்டைலிஸ்ட்டாக இருக்கும் போதே, இயக்குனர் ஜே ஜே ப்ரெட்ரிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஒரே வருடத்தில் ஆண் குழந்தைக்கு தாயானார்.

25
முதல் கணவருடன் விவாகரத்து:

முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2023-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் தன்னுடைய தாயாருடன் வசித்து வந்த ஜாய்க்கு சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜிடம் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட ஜாய் டிசைன் செய்த ஆடைகளையே ரங்கராஜ் பயன்படுத்தினார். நாளடைவில் இதுவே இவர்களுக்கும் காதல் பிறக்க காரணமாக அமைந்தது.

35
ஜாய் - ரங்கராஜ் லிவிங் ரிலேஷன்ஷிப்:

ஜாய் கிரிசில்டாவுக்கு திருமண ஆசை காட்டி, லிவிங் ரிலேஷன் ஷிப்பில் பழகிய ரங்கராஜ், தன்னைக்கும் தன்னுடைய மனைவிக்கும் விவாகரத்து குறித்த பேச்சு வாரத்தை சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மாதம்பட்டி பேச்சை நம்பி, தன்னுடைய காதலில் தீவிரமாக இருந்த ஜாய்க்கு கடைசியில் காத்திருந்தது பேரதிர்ச்சி. ஜாய் கிரிசில்டா 5 மாதம் கர்ப்பமாக இருந்த போது, குழந்தையை கலைக்க கூறி பலமுறை வற்புறுத்தியதோடு... அடித்து கொடுமை படுத்தியதாகவும் கூறினார்.

45
ஜாய்யுடன் தொடர்பை துண்டித்த மாதம்பட்டி:

பின்னர் ஜாய் கிரிசில்டாவை குடும்பத்தினர் பேச்சை கேட்டுக்கொண்டு முழுவதுமாக ரங்கராஜ் தரவிர்த்து விட்டதாகவும், ஜாய் குற்றம் சாட்டி இருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய், கடந்த வாரம், மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு மாதம் 6.5 லட்சம் தர வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மறுதினம்... ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஏற்கனவே இதுகுறித்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த நிலையில், தற்போது ஜாய் தன்னுடைய குழந்தையின் பெயருடன் கூடிய பர்த் சர்டிபிகேட்டை வெளியிட்டு மாதம்பட்டியை வெறுப்பேற்றியுள்ளார்.

55
ஜாய் வெளியிட்ட குழந்தையின் பர்த் சர்டிபிகேட்:

அதாவது இந்த பர்த் சர்டிபிகேட்டில், குழந்தையின் பெயர் ராகாராஜ் தங்கவேல் என இடம்பெற்றுள்ளது. தந்தையின் வயது, 43 என்றும் அவருடைய தொழில் செஃப் என குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னுடைய குழந்தையின் காதலை பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பேஸ்ட் செய்துள்ள ஜாய், இந்த குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என டேக் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories