தலைமறைவான மாதம்பட்டி ரங்கராஜ்..? தில் இருந்தா DNA டெஸ்ட் எடுக்க வா... ஜாய் கிரிசில்டா சவால்

Published : Nov 20, 2025, 11:56 AM IST

டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவும் தான் தயாராக இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் தலைமறைவு ஆகிவிட்டாரா என கேள்வி எழுப்பி ஜாய் கிரிசில்டா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

PREV
15
Joy Crizildaa Challenge Madhampatty Rangaraj

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள கோவிலில் சிம்பிளாக நடைபெற்று இருக்கிறது. இதையடுத்து இருவரும் இரண்டு ஆண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர் ஜாய் கிரிசில்டாவுடன் ரகசியமாக திருமண வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த ஜூலை மாதம் தான் வெளிச்சத்துக்கு வந்தது.

25
வில்லங்கத்தில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்

ஜூலை மாதம், இருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, தாங்கள் திருமணம் செய்துகொண்டதாக கூறி இருந்தார். அந்த பதிவு போட்ட மறுதினமே தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்தார். பின்னர் போகப் போக தான் இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பது தெரியவந்தது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கல்யாணம் பண்ணி கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்த பின்னர் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ஜாய்.

35
ஜாய் கிரிசில்டா புகார்

மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை கர்ப்பம் ஆனதாகவும், அதில் மூன்று முறை கருக்கலைப்பு செய்துவிட்டதாகவும், நான்காவது முறையும் கருக்கலைப்பு செய்ய முயன்றபோது, அதைச்செய்தால் உயிருக்கே ஆபத்து வரும் என டாக்டர்கள் சொன்னதாகவும் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி மாதம்பட்டி ரங்கராஜ் மீது மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார் ஜாய். இதையடுத்து விசாரணைக்கும் ஆஜராகி இருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.

45
அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்

இந்த விசாரணையில், தான் ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் அப்பா என்று ஒப்புக்கொண்டதாகவும் ஜாய் ஒரு பதிவு போட்டார். ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், தான் மகளிர் ஆணையத்தில் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அது என்னுடைய குழந்தை இல்லை. அதற்காக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவும் தயாராக இருக்கிறேன் என அறிவிக்கை வெளியிட்டு இருந்தார்.

55
ஜாய் கிரிசில்டா சவால்

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாவில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், ‘என் புருஷன் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்தீங்கனா அவரை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வரச்சொல்லுங்க. அவர் டிஎன்ஏ ஸ்டேட்மெண்ட் விட்டு 15 நாள் ஆச்சு. இப்போ எங்க தலைமறைவா இருக்காரு? உங்களுக்கு நேர்மையும், துணிவும் இருந்தால், டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வாங்க ஹஸ்பண்ட் மாதம்பட்டி ரங்கராஜ்’ என பதிவிட்டு அவருடன் ஜோடியாக எடுத்துக் கொண்ட அன்சீன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஜாய். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories