ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வாரணாசி. இப்படத்தில் ஹனுமன் கதாபாத்திரத்தில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளாராம். அதைப்பற்றி பார்க்கலாம்.
இயக்குனர் ராஜமௌலி, மகேஷ் பாபுவை வைத்து 'வாரணாசி' படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான டீசர் மூலம், இது ஒரு டைம் டிராவல் படம் என்பதை ராஜமௌலி உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபு திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமனாக தோன்றவுள்ளார். ராமாயணத்தின் முக்கிய நிகழ்வு இப்படத்தில் உள்ளதாக ராஜமௌலி ஒரு நிகழ்வில் தெளிவுபடுத்தியுள்ளார். டீசரை தொடர்ந்து, இப்படத்தில் ராமர் கும்பகர்ணனை வதம் செய்யும் காட்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
24
யார் அந்த தமிழ் நடிகர்?
ராமாயண காட்சிகள் என்பதால் ஹனுமன் கதாபாத்திரம் கட்டாயம் இருக்கும். ராமனாக மகேஷ் பாபு நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் ஹனுமன் யார் என்பது தெளிவாகவில்லை. இந்நிலையில், ஹனுமன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஆர். மாதவனை ராஜமௌலி தேர்வு செய்துள்ளதாக தகவல் பரவுகிறது. மாதவன் என்றாலே 'சாக்லெட் பாய்' இமேஜ் தான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்டவரை ஹனுமன் கேரக்டரில் ராஜமௌலி எப்படி காட்டப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
34
வாரணாசி திரைப்படம்
ராஜமெளலி இயக்கிய பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் பான் இந்தியா அளவில் கொண்டாடப்பட்டதால் வாரணாசி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பான் இந்தியா அளவில் உள்ளது. இப்படம் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். வழக்கம்போல் ராஜமெளலியின் ஆஸ்தான இசையமைப்பாளர் கீரவாணி தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
வாரணாசி திரைப்படம் 2027-ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் பெரும்பாலான காட்சிகள் கென்யாவில் தான் படமாக்கப்பட உள்ளதாம். இப்படம் இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழாவை சுமார் 27 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தனர். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.