எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசி ஜாமினில் வெளியே வந்துள்ளதால் கதைக்களத்தில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கெவினை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அறிவுக்கரசி தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஜெயிலில் இருந்து வந்ததும் ஆதி குணசேகரனின் காலில் விழுந்த அறிவுக்கரசி, தன்னை ஜாமினில் வெளியே கொண்டுவந்ததற்காக அவரிடம் கண்ணீர்மல்க நன்றி தெரிவிக்கிறார். இதைப்பார்த்த நந்தினி இதெல்லாம் இந்த ஆளு வேலை தானா என ஷாக் ஆகிறார். பின்னர் வீட்டுக்குள் சென்ற அறிவுக்கரசிக்கு தடபுடலாக கறி விருந்து கொடுத்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
தர்ஷனை சதியில் சிக்க வைத்த அன்பு
பார்கவி உடனான திருமணத்தை செல்லாக்காசு ஆக்கிய ஆதி குணசேகரன், தர்ஷனை அன்புக்கரசி உடன் தான் இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறார். இதனால் வேறுவழியின்றி அன்புக்கரசி உடன் ஒரே ரூமில் தங்குகிறார் தர்ஷன். இரவில் தர்ஷன் போனில் இருந்து பார்கவிக்கு போன் போடும் அன்புக்கரசி. போனை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, தர்ஷனிடம் பாசத்தை பொழிகிறார். நமக்குள் நடந்த விஷயத்தை மறக்க முடியவில்லை என்றும், ஐ லவ் யூ என்றும் கூறுகிறார். இதை எதிர்த்து பதில் பேச வரும் தர்ஷனின் வாயையும் அடைக்கிறார் அன்புக்கரசி. இதையெல்லாம் போனில் கேட்டு குழம்பிப் போகிறார் பார்கவி.
34
மாறும் கதைக்களம்
இதையெல்லாம் கேட்டு ஃபீல் பண்ணும் பார்கவியிடம் என்ன நடந்தது என கேட்கிறார் தர்ஷினி. அதையெல்லாம் எனக்கு சொல்லக்கூட பிடிக்கல என கூறுகிறார் பார்கவி. தர்ஷன் மீது வெறுப்பு வர வைக்க வேண்டும் என்பதற்காக அன்புக்கரசி செய்யும் சதிவேலை என்பது தெரியாமல் பார்கவி குழம்பி இருக்கிறார். அறிவுக்கரசியும் தன் சொத்தை எல்லாம் தர்ஷன் பெயருக்கே எழுதிக்கொடுத்துவிடுவதாக ஆசை வார்த்தை கூறி இருப்பதால், கதையும் வேறு களத்தை நோக்கி நகர்கிறது போல் தெரிகிறது. இனி வரும் நாட்களில் சொத்துப் பிரச்சனை தலைவிரித்தாடும் என்பது போல் தெரிகிறது.
மறுபுறம் சக்தியை தேடி அலையும் ஜனனிக்கு, அவர் எங்கே இருக்கிறார் என்கிற க்ளூ கிடைக்கிறது. அதனால் ஒரு மர்ம நபரை காரில் சேஸ் பண்ணி செல்கிறார் ஜனனி. சக்தி இருக்கும் இடத்தை ஜனனி நெருங்கிவிட்டதால், அவர் சக்தியை ராமசாமி மெய்யப்பனிடம் இருந்து எப்படி மீட்கப்போகிறார்? ஆதி குணசேகரன் கேட்ட வீடியோ ஆதாரம் ஜனனியிடம் கிடைத்ததா? இல்லை போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்து சக்தியை மீட்பாரா? ஜீவானந்தம் உதவ வருவாரா? அடுத்தடுத்து என்னென்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் விரிவாக பார்க்கலாம்.