வேற லெவல்... மூன்றே நாளில் 'பொன்னியின் செல்வன் 2' படம் இத்தனை கோடி வசூலித்துவிட்டதா? முழு விவரம்!

Published : May 01, 2023, 02:23 PM IST

'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகும் நிலையில், இப்படம் உலக அளவில் எத்தனை கோடி வசூலித்துள்ளது,  என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  

PREV
14
வேற லெவல்... மூன்றே நாளில் 'பொன்னியின் செல்வன் 2' படம் இத்தனை கோடி வசூலித்துவிட்டதா? முழு விவரம்!

உண்மை வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக வைத்து கல்கி எழுதிய, புனையப்பட்ட நாவலான பொன்னியின் செல்வன் கதையை, மையமாக வைத்து இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று, மற்றும் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு.  இப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
 

24

இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம், ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், தொடர்ந்து நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

கழுத்தை நெரிந்த கடன்..! பிரபல நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..!

34

இப்படம் ஒரு 5 பாகங்கள் கொண்ட,  ஒரு நாவலை தழுவி... இயக்குனர் மணிரத்னம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இயக்கி இருந்ததால்,  பாகத்திற்கு சிலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்த நிலையி,ல் இரண்டாம் பாகத்தை மணிரத்தினம் எப்படி கொண்டு இருப்பார்? எப்படி முடித்திருப்பார்? என்கிற கேள்வி அனைத்து ரசிகர்கள் மனதிலும் இருந்தது. ஆனால் முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய விதம் அருமையாக இருக்கிறது என்று, தொடர்ந்து அனைத்து தரப்பினரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ரசிகர்கள் பலர் பாகுபலி திரைப்படத்தையே மணிரத்னத்தின் 'பொன்னின் செல்வன்' விஞ்சி விட்டதாக பெருமை பேசி வருகிறார்கள்.
 

44

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மூன்று நாட்களே ஆகும் நிலையில், தற்போது இப்படம், உலக அளவில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகமாகும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 'பொன்னியின் செல்வன்' படத்தில் திரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா, ரகுமான், போன்ற பல நடித்துள்ளனர. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எந்த நடிகராலும் செய்யமுடியாத சாதனைகளை செய்தவர் அஜித்..! தல-யை ரசிகர்கள் கொண்டாடவும் இது தான் காரணம்!

Read more Photos on
click me!

Recommended Stories