
நடிகர் அஜித் எந்த வித சினிமா பின்னணியும் இன்றி, திரையுலகின் உள்ளே நுழைந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பின்னர், எந்த சினிமா பின்னணியும் இன்றி, உச்சத்தை அடைந்தவர் இவர் என்பது அஜித் தான்.
சரி தல அஜித் பற்றியும், அவரது சாதனைகள் குறித்தும்... இந்த தொகுப்பில் பார்ப்போம்...
இன்று ரசிகர்களால் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும், அஜித் 1971 ஆம் ஆண்டு... இதே நாள், அதாவது மே 1ஆம் தேதி, ஹைதரபாத்தில் சுப்பிரமணியம் - மோஹினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை ஒரு மலையாளி, அம்மா சிந்தி சமூகத்தை சேர்ந்தவர். அஜித்துக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். சிறு வயதில் இருந்தே படிப்பின் மீது பெரிதாக நாட்டம் இல்லை என்றாலும், மெக்கானிகல் வேலைப்பாடுகள், மற்றும் பைக் ரேசிங்கில் கொள்ளை ஆர்வம்.
அஜித்தின் ஆசையை புரிந்து கொண்ட அவரின் பெற்றோர்... அஜித்தை நீ இப்படித்தான் இருக்க வேண்டும், இதை தான் செய்ய வேண்டும் என ஒரு போதும் நிர்பந்தித்து இல்லை. அவரின் இஷ்டப்படி செயல்பட அனுமதி கொடுத்தனர். அன்று பெற்றோர் கொடுத்த சுதந்திரமும், ஊக்கமும் தான் பின்னாளில் அஜித்தை மிகப்பெரிய நடிகராக மாற்றியது.
அஜித் முதல் முதலில்,1990 ஆம் ஆண்டு 'என் வீடு என் கணவர்' என்கிற திரைபடத்தில் ஒரு பாடலில் பள்ளி மாணவராக நடித்தார். இதை தொடர்ந்து, 1993ல் அஜித்துக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார். ஒரு சில காரணங்களால்,அமராவதி திரைப்படம் வெளியாவதில் சிறு தாமதம் ஏற்படவே... இதற்கு முன்பே அஜித்தின் இரண்டாவதுபடமான பிரேம புஸ்தகம் என்னும் தெலுங்கு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடிகர் சமுத்திரக்கனி குடும்பத்துடன் சாமி தரிசனம்
அஜித் ஆரம்ப காலங்களில் நடுநிலையான ஒரு ஹீரோவாகவே பார்க்கப்பட்டார். நிலையான ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க தடுமாறிய நிலையில் தான், அஜித் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடித்த ஆசை திரைப்படம் வெளியாகி, அல்டிமேட் வெற்றி பெற்றது. பின்னர் அனைத்து இயக்குநர்களாலும் தேடப்படும் ஹீரோவாக மாறினார். இதை தொடர்ந்து அஜித் அடுத்தடுத்து நடித்த காதல் கோட்டை, போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி, 3 தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்தது.
சினிமாவில் ஜெயித்து விட்டாலும் ஒரு போதும் தன்னுடைய பேஷனை அஜித் கைவிட்டது இல்லை. திரைப்படங்களில் நடித்து கொண்டே, பைக் ரேஸ், மற்றும் கார் ரேஸில் ஈடுபட்டார். ஒரு முறை அஜித்துக்கு மிகப்பெரிய விபத்து நேரத்தில் பலத்த காயமடைந்தார். பின்னர் ஒருவழியாக அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் நடிக்க துவங்கினார்.
சமீப காலமாக பைக் மற்றும் கார் ரேஸில் தல கலந்துகொள்வது இல்லை என்றாலும்... உலகை சுற்றும் வாலிபனாக மாறி இந்தியா முழுவதையும் சுற்றி முடிந்து விட்டதாக சமீபத்தில் தெரிவித்தார். இதை தொடர்ந்து மீண்டும் தன்னுடைய பைக் பயணத்தை கையில் எடுத்துள்ள அஜித். அதே போல் அஜித் ஒரு சிறந்த சமையல் கலைஞர். எப்போதுமே விதவிதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தாண்டி, சமைத்து கொடுக்க வேண்டும் என நினைப்பவர். அஜித் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில், அடிக்கடி அவரின் பிரியாணி விருந்து நடைபெறுவது வழக்கமான ஒன்று. இதை தவிர தனக்கு நெருக்கமான வட்டாரங்களுக்கு சில ரெசிபி எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்பதையும் கூறி ஆச்சர்யப்படுத்துவார். இதனை ரோபோ ஷங்கர் கூட பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
என்ன சிம்ரன் இதெல்லாம்... குட்டி தொப்பையை காட்டு ரசிகர்களை கூல் செய்த ஷிவானி! லேட்டஸ்ட் போட்டோஸ்!
சமையலை தாண்டி, போட்டோ கிராபி, ஏரோ மாடலிங், ரிப்பில் ஷூட்டிங் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். குறிப்பாக ஐஐடி மாணவர்களுக்கு... பேராசிரியராக இருந்து இவர் டிசைன் செய்த தர்ஷா என்கிற ஏரோ ஆம்புலன்ஸ், பல மணிநேரம் விண்ணின் பறந்து, முதல் பரிசை தட்டி சென்று சாதனை படைத்தது.
இப்படிப்பட்ட சாதனைகளை மற்ற நடிகர்கள் யாரவது செய்துள்ளார்களா என்றால் நிச்சயம் இல்லை. இது மட்டும் இன்று இன்னும் தன்னுடைய திறமைக்கான தேடுதலையும் அஜித் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். அஜித்துக்கு எப்படி அவரின் பெற்றோர் உறுதுணையாக நின்றார்களோ... அதே போல் தன்னுடைய காதல் கணவரின் ஆசைக்கு வழி விட்டு, சுதந்திரமாக சுற்றி வர அவரின் மனைவி ஷாலினி அஜித் மற்றும் பிள்ளைகளும் என்றேனும் உறுதுணையாக உள்ளனர். அனைவருக்கும் உதவும் மனம் கொண்டவர் அஜித்... தன் நலனை விட ரசிகர்கள் நலனில் அதிகம் அக்கறை காட்டுவார் இது தான் அவரை ரசிகர்கள் கொண்டாடவும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.