தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அட்லீ. தொடர்ந்து 4 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, தற்போது இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கானே தயாரித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளில் தற்போது செம்ம பிசியாக உள்ளார் அட்லீ. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
ஜவான் படத்திற்கு பின்னர் அட்லீ விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் கடைசியில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த ரேஸில் இணைந்து தளபதி 68 படத்தை தட்டித்தூக்கியது. அப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இதன்மூலம் தளபதி 68 பட வாய்ப்பு அட்லீ வசம் இருந்து கைநழுவிப்போனது உறுதியானது.
இதையும் படியுங்கள்... அருள்நிதி கிராமத்து நாயகனாக அசத்தினாரா? சொதப்பினாரா? - கழுவேத்தி மூர்க்கன் பட விமர்சனம் இதோ
தளபதி 68 படம் கைநழுவிப்போன பின்னர் அட்லீ யார் படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், தற்போது புது டுவிஸ்ட் ஆக அட்லீ இயக்க உள்ள அடுத்த படத்தில் தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜுன் அல்லது கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது. இருவருமே பான் இந்தியா நட்சத்திரங்கள் என்பதால் இவர்களில் யார் அட்லீ படத்தில் நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு தற்போது உருவாகி உள்ளது.