தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்ததால், தற்போது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சிவா. அவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தற்போது அப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் பிசியாக நடைபெற்று வருகிறது.
24
மாவீரன் படத்துக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ரவிக்குமார் இயக்கி இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து ரிலீசுக்கு படங்கள் காத்திருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் தான் அடுத்ததாக நடிக்கும் எஸ்.கே.21 படத்துக்கான பணிகளில் பிசியாகிவிட்டார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
எஸ்.கே. 21 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை நாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் பணிகளில் கவனம் செலுத்துவதற்காக டுவிட்டரில் இருந்தே சில மாதங்கள் விலகுவதாக அறிவித்தார் சிவா. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்றது. அங்கு அண்மையில் ஜி20 மாநாடு நடைபெற்றதால், பாதுகாப்பு கருதி படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
44
காஷ்மீரில் அனுமதி மறுக்கப்பட்டதால் சென்னை திரும்பியது படக்குழு. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை விமான நிலையம் வந்தபோது அவருடன் ரசிகர், ரசிகைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில் நரைத்த தாடி மற்றும் உடல் எடை கூடி காட்சியளிக்கிறார் சிவகார்த்திகேயன். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.