Published : May 16, 2026, 08:00 AM ISTUpdated : May 16, 2026, 08:03 AM IST
Jananayagan Leak: நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகள் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஜிட்டல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் விஜய் தனது கடைசி படமான 'ஜனநாயகன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றும் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. இந்த சம்பவம் திரையுலகில் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
26
ஜனநாயகன் படம் லீக்
இதனிடையே சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஜனநாயகன் படம் திடீரென இணையதளத்தில் வெளியாகி படக்குழு மற்றும் விஜய் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
36
காவல்துறை அதிரடி
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு இணையவழி குற்ற தடுப்பு பிரிவானது, 11.04.2026 அன்று பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 47/2026 தொடர்பான "ஜனநாயகன்" திரைப்படத்தின் ஆன்லைன் கசிவு மற்றும் சட்டவிரோத பரவல் குறித்த விசாரணையின் தொடர்ச்சியாக பின்வரும் செய்தியினை வெளியிடுகிறது. டிஜிட்டல் கடத்தல் (Digital Piracy) கும்பல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணை மற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான கீழ்க்கண்ட மூவர் மீது தடுப்பு காவல் சட்டம் (குண்டர் சட்டம்) கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த், S. செல்வம், பாலா என்ற பாலகிருஷ்ணன் திருடபட்ட திரைப்படம் இணையத்தில் பகிரபட்டதில் இவர்களின் தொடர்பானது, விரிவான விசாரணை மூலமாகவும் தொழில்நுட்ப ஆதாரங்கள் சேகரிப்பு மற்றும் பொது ஒழுங்கை பாதிக்கும் வகையிலான தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 13.05.2026 அன்று இவர்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன.
56
சட்டவிரோத செயல்கள்
குற்றவாளிகள், "ஜனநாயகன்" திரைப்படத்தின் திருட்டு பதிப்பை ஆன்லைன் தளங்கள் மற்றும் டிஜிட்டல் சேனல்கள் மூலம் சட்டவிரோதமாக திருடுதல், திருத்தி அமைத்தல், பரவல் மற்றும் பகிர்வு செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. குற்றத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு மேலும் சட்டவிரோத செயல்களை தடுக்க இந்த தடுப்புக் காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
66
பொதுமக்களுக்கு அறிவுரை
திருட்டு உள்ளடக்கத்தை பதிவிறக்கம் செய்யவோ, ஸ்ட்ரீம் செய்யவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிஜிட்டல் கடத்தலில் எந்தவிதமான ஈடுபாடும், அதில் உள்ளடக்கங்களை பகிர்வு செய்தல் அல்லது ஊக்குவித்தல் உள்ளிட்ட செயல்களும் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
புகார் அளிக்க
திருட்டு உள்ளடக்கம் அல்லது சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் ஏதேனும் இருந்தால் பின்வரும் இணையதளம் மூலமாக உடனடியாக புகாரளிக்க பொதுமக்கள் கேட்டு கொள்ளபடுகிறார்கள். சைபர் க்ரைம் உதவி எண் 1930 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.