Jana Nayagan Movie Story Leak and Vijay Dual Role : தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் கதை குறித்து முக்கியமான தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகியிருக்கும் படம் தான் ஜன நாயகன். அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்ற தளபதி கச்சேரி பாடல் வெளியான நிலையில் ஒரு பேரே வரலாறு என்ற 2ஆவது சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலானது. இதில், விஜய்யின் டான்ஸூம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
24
Jana Nayagan Vijay Dual Role
வரும் 27ஆம் தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, பாபி தியோல், பிரியாமணி என்று ஏரளாமான பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
34
Vijay Two Characters in Jana Nayagan
இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக சொல்லப்புகிறது. 'ஜன நாயகன்' படத்தின் முக்கிய கரு, சித்தாந்தங்களின் மோதலைப் பற்றியது. "ஒருவர் மக்களுக்காக நிற்கிறார், மற்றொருவர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்" என்ற வரி இதை தெளிவுபடுத்துகிறது. இந்த இரு எதிரிகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே மோதியுள்ளனர். அந்த பழைய மோதலின் விளைவே, நிகழ்காலத்தில் அவர்கள் மீண்டும் சந்திப்பதற்குக் காரணம். இது படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு வலுவான சஸ்பென்ஸை உருவாக்குகிறது.
44
Jana Nayagan Latest Update 2025
பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு குழந்தையின் மௌனமான பயம் பழைய மோதலை மீண்டும் கிளறுகிறது. இந்த சூழலில், ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி, அந்த குழந்தைக்கு நீதி வழங்க களமிறங்குகிறார். இதுவே கதையின் திருப்புமுனையாக அமைகிறது. தனிப்பட்ட பழிவாங்கலாகத் தொடங்கும் இந்தக் கதை, காலப்போக்கில் சமூக நீதிக்கான ஒரு பெரிய போராக மாறுகிறது. இது தனிப்பட்ட பகையை விட பெரியது என்பதை உணர்த்துகிறது. விஜய் இப்படத்தில் அரசியல்வாதி மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. 'ஜன நாயகன்' ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல, சமூகப் பொறுப்புள்ள படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.