பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுக்கடுக்காக பொய்களை சொல்லி இப்போது தன்னோட வாழ்க்கையை இழந்துவிட்டு நிற்கிறார் தங்கமயில். தன்னைப் பற்றிய உண்மைகளை மறைக்க கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று கூட அள்ளி விட்டார். கோமதி தன்னுடைய மகனை நம்பாமல் தங்கமயில் சொல்வதை எல்லாம் நம்பினார்கள். இந்த நிலையில் தான் தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் சரவணன் சொல்லவே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
26
kandian stores 2 Serial
இதனால் ஆத்திரமடைந்த பாக்கியம் தன்னுடைய மகளை வீட்டை விட்டு துரத்திவிட்ட பாண்டியனையும் அவரது குடும்பத்தையும் நிம்மதியாக வாழ விட மாட்டேன் என்று சபதம் எடுத்தார். மேலும் போலீசிலும் புகார் அளிப்பேன், எந்த எல்லைக்கும் போவேன் என்று எச்சரித்தார். ஏனென்றால் நடக்கவே நடக்காது என்று சொன்ன மயிலின் திருமணத்தை நடத்தி முடிந்திருக்கிறேன்.
36
Thangamanyil Dharna
மேலும், வீட்டிற்கு வந்த மகளிடம் இன்னும் 2 நாளில் உன்னை உனது வீட்டில் வாழ வைப்பேன் என்றார். அவர்களே வந்து மன்னிப்பு கேட்டு உன்னை கூட்டிக் கொண்டு செல்வார்கள் என்றார். ஆனால் அம்மா சொல்வதை எல்லாம் மயில் நம்பவில்லை. ஏனென்றால் மறுபடியும் பொய் சொல்லி விடுவாரோ என்ற பயம். இதே பீதியில் தனது தங்கைக்கு அட்வைஸும் செய்தார். நம்முடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்து எவன் ஒருவன் வருகிறானோ அவனை திருமணம் செய்து கொள் என்றார். முக்கியமாக அம்மா அப்பா பேச்சை மட்டும் கேட்கவே கேட்காத என்றார்.
46
Justice for Thangamayil
இதற்கிடையில் தங்கமயில் மன வேதனையில் ஏதாவது செய்து கொள்வார் என்று அவருடைய அம்மா பாக்கியம் மயிலின் முந்தானையை தனது முந்தானையுடன் கட்டிக் கொண்டு தூங்கினார். ஆனால், மயிலுக்கு தூக்கம் வரவில்லை. அதனால், உடனே எழுந்து இரவோடு இரவாக தனது கணவர் வீட்டிற்கு வந்து வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தார். மீனா மற்றும் ராஜீ இருவரும் வாசல் தெளித்து கோலமிட வெளியில் வரவே தங்கமயிலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரிடம் சென்று பேசவே இது நம்முடைய வீடு தான். நான் பிறந்து வளர்ந்தது தான் அம்மா வீடு. அங்க அம்மா, அப்பா மற்றும் தங்கச்சி இருக்காங்க.
56
Pandian stores 2 Serial Today Episode
இது தான் என்னுடைய வீடு. நான் இங்க தான் இருக்கணும் என்றார். மேலும், அத்தை அத்தை என்று குரல் எழுப்ப அவரும் வெளியில் வந்து திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போன்று வந்து இங்க வர்ற என்று முகத்தில் அடித்தது போன்று கேட்டார். நீ பண்ண எதையும் மன்னிக்க முடியாது. மன்னிக்க கூடிய காரியத்தை நீ செய்யவில்லை. உன்னை வீட்டிற்குள் விட முடியாது. மரியாதை உங்க வீட்டிற்கு போய்விடு என்றார். அப்போது பாண்டியன் வர, மாமா மாமா என்றார்.
66
Thangamayil Dharna protest
மேலும், சரவணன் வர ஒரு நிமிடம் பேசாமல் இருந்தார். பிறகு எல்லோருமே வீட்டிற்குள் சென்று கதவை அடைக்க, எதிர்வீட்டிலிருந்த காந்திமதியிடம் சென்று அப்பத்தா நீங்களாவது சொல்லக் கூடாதா என்றார். பின்னர் மீண்டும் வந்து கதவை தட்டினார். நான் பாவம் இல்லையா என்னை ஏன் இப்படி வெளியில் நிற்க வைக்கிறீர்கள். நான் அவ்வளவு பெரிய தப்பை செய்யவில்லை. என்னை மன்னிக்க கூடாதா என்று கதறி அழுதார். இதையடுத்து கோமதி மயிலின் அம்மா பாக்கியத்திற்கு போன் போட்டு இதைப் பற்றி சொல்ல அடுத்து என்ன நடக்கிறது என்று நாளைய எபிசோடில் பார்க்கலாம்.