நாங்கள் ரெண்டு பேரும் தானாக வீட்டிற்கு வந்தவர்கள் என்பதால் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்கமயிலுக்கு தான் மாமா முக்கியத்துவம் கொடுத்தார் என்று அவரை ராஜீ குத்திக் காட்டியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது குடும்ப பிரச்சனை ஒளிபரப்பாகி வருகிறது. பொய் சொல்லி திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன அதனுடைய விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தெளிவாக எடுத்துக் காட்டி வருகிறது. இதில் பெற்றோரால் பார்த்து வைத்த திருமணம் தான் சரவணனுக்கு நடந்தது. ராஜீக்கு கோமதியின் கட்டாயத்தால் நடந்தது. செந்தில் மற்றும் மீனாவிற்கு கதிர் கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார்.
24
Raji vs Thangamayil Conflict
இப்படி ஒரு வித்தியாசமான குடும்பம் தான் பாண்டியன் குடும்பம். தங்கமயில் பற்றி எல்லா உண்மைகளும் தெரிந்த பிறகு அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். தனது மகளை இந்த குடும்பத்தில் வாழ வைக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்று மயிலின் அம்மா பாக்கியம் சபதம் எடுத்துள்ளார். அதுவும் 2 நாளில் அவர்களாகவே வந்து மன்னிப்பு கேட்டு உன்னை கூட்டி செல்வார்கள் என்று மயிலிடம் கூறி அவரை சமாதானம் செய்து வைத்தார். இத்தனை நாட்கள் அம்மாவின் பேச்சை கேட்டதால் தான் என்னுடைய வாழ்க்கை இப்படியாகிவிட்டது என்று கதறிய மயில் இனிமேலும் உன்னை நம்பக் கூடாது என்று சுயமாக முடிவெடுக்க தொடங்கிவிட்டார்.
34
Raji Exposes Thangamayil Gold Jewels Truth
இந்த நிலையில் தான் மூத்த மருமகள் என்று தலையில் தூங்கி வைத்து கொண்டாடப்பட்டவர் தான் தங்கமயில். பாண்டியனும் சரி, கோமதியும் சரி அவருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால், அவர் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணமாக வருவார் என்று நினைக்கவில்லை. சரவணனை நம்பாமல் தங்கமயிலை நம்பும் அளவிற்கும் இருவரும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். தங்கமயிலின் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத கோமதி மீனா மற்றும் ராஜீ இருவர் மீதும் சந்தேகம் கொண்டார். ஏண்டி, நீங்கள் ஏதேனும் பொய் சொல்லி ஏமாத்திறீங்களா என்று கேட்டார். ராஜீ நீ உண்மையில் காலேஜ் படிக்கிறயா, மீனா நீ உண்மையில் கவர்மெண்ட் வேல தான் பாக்குறீயா என்றெல்லாம் கேட்டார்.
44
Raji Bold speech
ராஜீ தனது அண்ணன் மகள் என்று தெரிந்தும், கோமதி இப்படியொரு கேள்வியை அவரிடம் கேட்டார். இதே போன்று தான் மீனாவும். தன்னை அம்மாவாக நினைக்கும் மீனாவை பார்த்து இப்படியொரு கேள்வியை அவர் கேட்டுள்ளார். அப்போது தான் ராஜீ, ஏன் அத்தை நாங்கள் இருவரும் நாங்களாக இந்த குடும்பத்திற்கு வந்தவர்கள். ஆனால், மயில் அப்படியில்லை. நீங்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தீர்கள். அதனால், அவருக்கு தான் நீங்களும் சரி, மாமாவும் சரி இம்பார்ட்டன்ஸ் கொடுத்தீங்க. எங்களுக்கு அப்படி கொடுக்கவில்லை அல்லவா. இதை நான் குத்திக் காட்ட சொல்லவில்லை. நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் சொன்னேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.