சின்னத்திரையில் நம்பர் 1 சேனலாக இருந்து வரும் சன் டிவி, தொடர்ச்சியாக ஐந்து புத்தம் புது சீரியல்களை ஒளிபரப்ப இருக்கிறது. அது என்னென்ன சீரியல்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சின்னத்திரையில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்களை காலை முதல் இரவு வரை கொடுத்து வரும் சன் டிவி, டிஆர்பி ரேஸிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கு போட்டியாக விஜய் டிவியும் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பினாலும், சன் டிவியை பீட் செய்ய முடியவில்லை. சன் டிவியில் சில சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளதால், அதற்கு ஈடுகட்ட, அதிரடியான கதைக்களத்துடன் கூடிய ஐந்து டக்கரான சீரியல்களை களமிறக்க உள்ளார்கள். அதில் இரண்டு டப்பிங் சீரியல்களும் அடங்கும். அது என்னென்ன சீரியல்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
25
துளசி
சன் டிவியில் விரைவில் தொடங்கப்பட உள்ள புத்தம் புது சீரியல்களில் துளசி சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ஹீரோவாக அருண்குமாரும், ஹீரோயினாக ஸ்வர்னிகாவும் நடிக்கிறார்கள். இந்த சீரியலை சித்திரம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரியல் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஒளிபரப்பாக வாய்ப்புகள் இருக்கிறது. காலை நேரத்தில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
35
இரு மலர்கள்
சன் டிவியில் லாஞ்சுக்காக காத்திருக்கும் மற்றொரு புது சீரியல் தான் இரு மலர்கள். இந்த சீரியலில் ஹீமா பிந்துவும், ஜீவிதாவும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மேலும் சந்தோஷ் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த சீரியலை பற்றிய மற்ற அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சீரியல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ஒளிபரப்பாகலாம்.
சன் டிவி ஒரு பிரம்மாண்டமான சீரியலும் அடுத்த ஆண்டு களமிறங்க உள்ளது. அந்த சீரியலின் பெயர் பராசக்தி. இந்த சீரியலை விஷன் டைம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரியலில் பவன் ரவீந்திரா மற்றும் தேப்ஜினி தான் ஹீரோ - ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்கிற சீரியலில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் விஜயகுமார், திலக் சீனு, குறிஞ்சி, அஜய் ரத்னம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த சீரியலில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் விரைவில் மாலை நேரம் பிரைம் டைமில் லாஞ்ச் ஆக உள்ளது.
55
டப்பிங் சீரியல்கள்
3 தமிழ் சீரியல்கள் மட்டுமின்றி இரண்டு டப்பிங் சீரியல்களும் விரைவில் லாஞ்ச் ஆக இருக்கிறது. அதில் ஒன்று விட்டல விட்டல பாண்டுரங்கா என்கிற மராத்தி சீரியல். இது தமிழில் ஹர ஹர பாண்டுரங்கா என்கிற பெயரில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. மற்றொன்று நாகமணி என்கிற சீரியல். இந்தி மொழி சீரியலான இது தமிழில் டப் ஆகி ஒளிபரப்பாக உள்ளது. முன்னதாக நாகினி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை போல் நாகமணி சீரியலுக்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.