பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? வெயிட்டிங் லிஸ்ட்டிற்கு சென்ற ஜன நாயகன்... புது ரிலீஸ் தேதி என்ன?

Published : Jan 08, 2026, 02:26 PM IST

எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதன் புது ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் கசிந்துள்ளது.

PREV
14
Jana Nayagan Release Postponed

நடிகர் விஜய்யின் கடைசிப் படம் 'ஜன நாயகன்'. அப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் முதலில் ஜனவரி 9ந் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தில் மத உணர்வை புண்படுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டதால், படக்குழு நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கின் விசாரணை முடிந்தாலும், தீர்ப்பு ஜனவரி 9ந் தேதி தள்ளிவைக்கப்பட்டதால், அன்றைய தினம் படம் ரிலீஸ் ஆகாது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

24
தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ், இந்தத் தாமதம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. தயாரிப்பாளர்கள் "கனத்த இதயத்துடன்" இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், "தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்" காரணமாக இந்தத் தள்ளிவைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். "எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9 அன்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'ஜன நாயகன்' படத்தின் வெளியீடு, எங்கள் கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

34
எளிதான முடிவு அல்ல

இந்தப் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இருக்கவில்லை," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும் தொடர்ச்சியான அன்பையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களின் அசைக்க முடியாத ஆதரவே எங்கள் மிகப்பெரிய பலம், அது ஒட்டுமொத்த 'ஜன நாயகன்' குழுவிற்கும் மிகவும் முக்கியமானது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

44
புது ரிலீஸ் தேதி என்ன?

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி பற்றிய தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஜனவரி 14-ந் தேதி பொங்கல் விருந்தாக ஜனநாயகன் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதே நேரம் தீர்ப்பு சென்சார் போர்டுக்கு சாதகமாக வந்தால் ஜனவரி 30ந் தேதி தான் ஜனநாயகன் வெளியிடப்படும் என சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

'ஜன நாயகன்' படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். KVN புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ளார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விஜய் மற்றும் பாபி தியோல் தவிர, இப்படத்தில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories