நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் அடிபொலி அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை எச். வினோத் இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். விஜய் மற்றும் பாபி தியோல் தவிர, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நரேன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
24
விஜய்யின் கடைசி படம்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27 அன்று மலேசியாவில் நடைபெறும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் மூலம் தமிழகத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் இது விஜய்யின் கடைசிப் படமாக இது அமையும். இப்படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் அறிவித்துள்ளதால், இது அவருக்கும் ஒரு ஃபேர்வெல் படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்குவதால் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வருகின்றன.
34
ஜனநாயகன் அப்டேட்
அந்த வகையில் இதுவரை ஜனநாயகன் திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் தளபதி கச்சேரி என்கிற பாடலை விஜய் பாடி இருந்தார். அந்தப் பாடல் கடந்த மாதம் வெளியானது. இதையடுத்து அப்படத்தின் இரண்டாவது சிங்கிளாக ஒரு பேரே வரலாறு என்கிற புரட்சிப் பாடலை வெளியிட்டனர். அதற்கும் ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்த நிலையில், ஜனநாயகன் மூன்றாவது சிங்கிள் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி ஜனநாயகன் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிளாக, ‘செல்ல மகளே’ என்கிற பாடல் வெளியிடப்பட இருக்கிறது. இப்பாடலையும் நடிகர் விஜய் தான் பாடி இருக்கிறார். இதன்மூலம் ஜனநாயகன் திரைப்படத்தில் அப்பா - மகள் பாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்ல மகளே பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். இப்பாடல் டிசம்பர் 26ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் விஜய் பாடிய இரண்டாவது பாடல் இதுவாகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.